செந்தில் பாலாஜி டிடிவியை நடுரோட்டில் விட்டுவிட்டார்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விமர்சனம்

 

செந்தில் பாலாஜி டிடிவியை நடுரோட்டில் விட்டுவிட்டார்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விமர்சனம்

தினகரனை முதல்வராக்காமல் விடமாட்டேன் என கூறிய செந்தில் பாலாஜி அவரை நடுரோட்டில் விட்டுவிட்டார் என அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

கரூர்: தினகரனை முதல்வராக்காமல் விடமாட்டேன் என கூறிய செந்தில் பாலாஜி அவரை நடுரோட்டில் விட்டுவிட்டார் என அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

டிடிவி தினகரனின் வலதுகரமாகவும், அவரை முதல்வராக்காமல் விடமாட்டேன் என சூளுரைத்தவருமான செந்தில் பாலாஜி திமுகவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமட்டுமின்றி அமமுகவில் இருக்கும் பலரையும் அவர் திமுகவிற்கு அழைத்து செல்ல திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து செந்தில் பாலாஜி மீது அதிருப்தியடைந்த அரவக்குறிச்சி ஒன்றிய அமமுக செயலாளர் மணிகண்டன், கரூர் நகர பாசறை செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் முன்னிலையில் அதிமுக-வில் இணைந்தனர்.

அதன்பிறகு அவர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் விஜயபஸ்கர், ஆர்கே நகர் தேர்தலில் டிடிவி தினகரன் இருபது ரூபாய் நோட்டை காண்பித்த போதே கூறினேன். அப்போது தினகரனை முதல்வராக்காமல் விடமாட்டேன் என்றார். மேலும் தினகரனின் கூடாரம் காலியாகும் எனவும் கூறினேன். ஆனால் தற்போது 2 வாரத்தில் காலியாகி விட்டது.

டிடிவி தினகரனை முதல்வராக்குவேன் என்று கூறிய செந்தில்பாலாஜி அவரை நடுரோட்டில் விட்டுவிட்டு சென்றுவிட்டார்.  திமுக-வில் இணைந்தால் செந்தில்பாலாஜிக்கு மட்டுமே மரியாதை கிடைக்கும். அவருடன் செல்வபவர்கள் வாசல் வரை சென்று திரும்பும் நிலையே ஏற்படும். அங்கிருந்து அதிமுக-விற்கு வரும் நபர்களுக்கு உரிய மரியாதையும் பாதுகாப்பும் கொடுக்கப்படும். கட்சியில் போட்டிகள் இருக்கலாம். ஆனால் விசுவாசமாக இருக்க வேண்டும். பதவி வெறியில் திரியும் செந்தில் பாலாஜி விரைவில் தினகரனை விட்டு சென்று விடுவார் என கூறிவந்தேன். ஏற்கனவே செந்தில்பாலாஜி மதிமுக-வில் இருந்து திமுக-விற்கு சென்று பின்னர் பதவிக்காக அதிமுக-விற்கு வந்தார். தினகரனுக்கு ஆதரவு அளித்து வந்த அவர் திமுக-விற்கு செல்கிறார். அடுத்து எத்தனை கட்சிக்கு செல்வார் என்பது தெரியவில்லை. நமக்கு அமமுக எதிரி கிடையாது என்றார்.