செட்டிநாடு ஸ்பெஷல்: கந்தரப்பம் செய்வது எப்படி?

 

செட்டிநாடு ஸ்பெஷல்: கந்தரப்பம் செய்வது எப்படி?

இனிப்பான செட்டிநாடு கந்தரப்பம் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க

இனிப்பான செட்டிநாடு கந்தரப்பம் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க. 

தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு         : 300 கிராம் 
பச்சரிசி                  : 1/2 கிலோ 
தேங்காய்               : 1 மூடி 
வெந்தயம்              :3 டீஸ்பூன்  
வெல்லம்                 : 600 கிராம் 
உளுந்தம்பருப்பு   : 300 கிராம் 
ஏலக்காய்               : 8
எண்ணெய்            : தேவையான அளவு 

செய்முறை:

அரிசி, பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை 1 மணி நேரம் ஊறவைத்து, வெல்லம் சேர்த்து நைஸாக ஆட்ட வேண்டும். இத்துடன் துருவிய தேங்காய்பூ, பொடித்த ஏலக்காய் சேர்த்து கொள்ளவும். கடைசியில் வாணலியில் எண்ணெய் காயவைத்து கரண்டியால் மாவை ஊற்றி சிவந்த பின் எடுக்கவும்.