செட்டிநாடு ஸ்பெஷல்: கத்தரிக்காய் சாதம் 

 

செட்டிநாடு ஸ்பெஷல்: கத்தரிக்காய் சாதம் 

செட்டிநாடு கத்தரிக்காய் சாதம் எப்படி செய்வது என்பதை பார்ப்போம்

செட்டிநாடு கத்தரிக்காய் சாதம் எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

அரிசி – 1/4 கிலோ 

கத்தரிக்காய் – 1/4 கிலோ

சின்ன வெங்காயம்  – 50 கிராம் 

தக்காளி – 1

பச்சை மிளகாய் – 6

வரமிளகாய் – 5

முந்திரி – 6

கசகசா – 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு 

எண்ணெய் – 50 கிராம் 

கொத்தமல்லி, கருவேப்பில்லை சிறிது.
சோம்பு, பட்டை, பூண்டு 5 பல், இஞ்சி சிறியது.

செய்முறை:

அரிசியை சாதமாக, பதமாக வடித்து கொள்ளவும்.  முந்திரி, பூண்டு,இஞ்சி, கசகசா, மிளகாய், கொத்தமல்லி, அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் காய்ந்தபின் சோம்பு, பட்டை, தாளித்து, கத்திரிக்காய், வெங்காயத்தை வதக்கி, தக்காளி போட்டு இரண்டு டம்ளர் தண்ணிர் ஊற்றி, மஞ்சள் தூள் போடவவும். இதில் சாதத்தைக் கொட்டி அரைத்த கலவையைப் போட்டு வெந்தபின் இறக்கவும்,