செட்டிநாடு ஸ்பெஷல்: உக்காரை 

 

செட்டிநாடு ஸ்பெஷல்: உக்காரை 

இனிப்பான செட்டிநாடு உக்காரை செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க 

இனிப்பான செட்டிநாடு உக்காரை செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க 

தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு         : 2 உழக்கு 
பச்சரிசி மாவு        : 4 மேசைக் கரண்டி 
தேங்காய்               : 1 1/2 மூடி 
வெல்லம்                 : 15 அச்சு 
ஏலக்காய்                :  2
நெய்                         : 150 கிராம்
முந்திரி                    : 10 பருப்பு 

செய்முறை:

பாசிப் பருப்பை வெறும் வாணலியில் வறுத்து, ஆறவைத்து மிக்ஸியில் தண்ணீர்விட்டு கெட்டியாக அரைக்கவும்.  பின்பு நெய்யில் பொடியாக நறுக்கிய முந்திரியை வறுத்துக் கொள்ளவும். வாணலியில் ஒரு கரண்டி நெய் ஊற்றி, அரைத்த பருப்பைப் போட்டு இளந்தீயில் நன்றாக வதக்கவும். இத்துடன் தேங்காய்ப்பூ சேர்த்து வதக்கி, பொடித்த வெல்லத்தைப் போட்டு, மீதமுள்ள நெய் போட்டு கிளறவும். வெடித்தவுடன்   பச்சரிசி மாவு, ஏலக்காய், முந்திரி சேர்த்து கிளறி எடுக்கவும்.