’செட்டப்’ செல்லப்பாவுக்கு பதிலடி… வெடித்துக்கிளம்பிய கெக்கே பிக்கே டி.டி.வி.தினகரன்..!

 

’செட்டப்’ செல்லப்பாவுக்கு பதிலடி… வெடித்துக்கிளம்பிய கெக்கே பிக்கே டி.டி.வி.தினகரன்..!

ராஜன் செல்லப்பா வேறு கட்சிக்குள் சேற்றை வாரி இரைத்து விட்டுப் போய் விட்டார். ஆக மொத்தத்தில் அதிமுகவில் இருந்த இரும்புக்கட்டுப்பாடு தவிடு பொடியாகத் தகர்ந்து போய்விட்டது.

ஒரு பக்கம் ஆட்சியை காப்பாற்ற எம்.எல்.ஏ.,க்களை தனது கட்டுப்பாட்டிற்குள்  வைத்திருக்க வேண்டிய நிலை. யார் எப்போது எந்த பக்கம் போவார்கள் என்று தெரியாததால் கண்காணிக்க வேண்டிய கட்டாயம். எதிர்கட்சி காரர்களை சமாளிக்க வேண்டி அவசியம். மற்றொரு புறம் உட்கட்சி பூசலை சமாளிக்க வேண்டிய அத்தியாவசியம் என நாலாபுறமும் திருதிருவென விழித்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடி

 இப்போது கட்சியை ஓ.பி. எஸ் ஆட்சியையும், கட்சியையும் கபளீகரம் செய்ய நினைக்கிறார். அதை தடுக்க வேண்டும் என்ற நிலையில் தத்தளித்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி.  ராஜன் செல்லப்பா வேறு கட்சிக்குள் சேற்றை வாரி இரைத்து விட்டுப் போய் விட்டார். ஆக மொத்தத்தில் அதிமுகவில்  இருந்த இரும்புக்கட்டுப்பாடு தவிடு பொடியாகத் தகர்ந்து போய்விட்டது.ராஜன் செல்லப்பா

இதனால், ராஜன் செல்லப்பாவுக்கு  பதிலடி கொடுக்க தயாராகி வருகிறார்கள் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள். இதனால் பல கலகங்கள் அதிமுகவில் அரங்கேற இருக்கிறது.  இந்த களேபரத்திற்கு இடையே கெக்கே பிக்கேவென அதிமுகவில் நடப்பதை பார்த்து சிரித்து வருகிறாராம் டி.டி.வி. எடப்பாடி

தாங்கள் ஏற்றிவிட்ட எடப்பாடி தங்களை எட்டி உதைத்ததால்  அவர் மீது கோபத்தின் உச்சியில் இருக்கிறார் டி.டி.வி.  இப்போது அதிமுகவில் நடக்கும் கூத்துக்களை பார்த்து ரொம்பவே சந்தோஷத்தில் இருக்கிறாராம்.  ஆனால் அவரது அடிப்பொடிகள் ’நம்ம கட்சியே கலகலத்து போய் கிடக்கு… இதுல மற்ற கட்சி கலகலப்பதை பற்றி சந்தோஷப்படுகிறாரே’’ எனக் கூறி வாயை மூடிக்கொண்டு   கள்ளச்சிரிப்பு சிரிக்கிறார்கள்.