‘செடியிலேயே அழுகிய வெங்காயம்’ : வெங்காய விலை டபுள் சென்சுரி அடிக்க அதிக வாய்ப்பு !

 

‘செடியிலேயே அழுகிய வெங்காயம்’ : வெங்காய விலை டபுள் சென்சுரி அடிக்க அதிக வாய்ப்பு !

வெங்காயம் அதிகமாக உற்பத்தி செய்யும் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் வெங்காய உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்பட்டது.

வெங்காயம் அதிகமாக உற்பத்தி செய்யும் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் வெங்காய உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனால் கடந்த மாதம் முதல் தற்போது வரை ஒரு கிலோ வெங்காயம் ரூ.90 முதல் 130 வரை விற்கப்பட்டு வருகிறது.குறிப்பாக சின்ன வெங்காயத்தின் விலை பெரிய வெங்காயத்தை விட டபுள் மடங்காக உள்ளது. இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு துருக்கியிலிருந்து 11 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளது. தமிழக அரசும் அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. 

ttn

தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் உள்ள தெத்தூர், மேட்டுப்பட்டி, கரடிக்கல் கிராமங்களில் சின்ன வெங்காயம் ஒரு போக விவசாயமாக மேற்கொள்ளப்படுகிறது. இதன் அறுவடை வரும் டிசம்பர் மாதம் இறுதியில் நடக்கவிருந்தது. அந்த கிராமங்களில் மொத்தமாக  300 ஏக்கர் நிலத்தில் வெங்காயம் வளர்க்கப்பட்டு வந்தது. இக்கிராமங்களில் இருந்து வெங்காயங்கள் அறுவடை செய்யப்பட்ட பின்பு தமிழகத்தின் உள்ளூர் வரத்து அதிகரித்து வெங்காய விலை குறையும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. 

ttn

இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக செடிகள் 300 ஏக்கர் பரப்பளவிலும் மழை நீர் தேங்கியுள்ளது. நேற்று வயலில் இருந்து துர்நாற்றம் வீசியதால் விவசாயிகள் செடியை சோதித்து பார்த்துள்ளனர். அப்போது, மழை நீரில் அனைத்து வெங்காயமும் செடியிலேயே அழுகி இருந்ததால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல், இந்த வெங்காயங்களை அப்படியே நிலத்தில் விட்டு வைத்தால் அடுத்து பயிரிடப்படும் பொருட்களும் பாதிப்படையும். இதனால், விவசாயிகள் அந்த வெங்காயங்களை நிலத்தில் இருந்து அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து பேசிய விவசாயிகள், இந்த வெங்காயங்கள் அறுவடை செய்யப்பட்டால் மூன்றில் ஒரு பங்கு லாபம் கிடைக்கும் என்று ஆசையுடன் இருந்தோம். ஆனால், தற்போது எல்லா செடியும் அழுகி முதலுக்கே மோசமான நிலை வந்து விட்டது. இதற்கு அரசு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். 

ttn

உள்ளூர் வரத்திற்கு இந்த கிராமங்களில் இருந்து வரும் வெங்காயங்களையே நம்பி இருந்த நிலையில், தற்போது மொத்த வெங்காயமும் பாதித்துள்ளது. இதனால், தற்போது விற்கப்படும் வெங்காய விலை இரட்டிப்பாக உயர அதிக வாய்ப்புள்ளது.