செங்கல்பட்டில் சிறுத்தை நடமாட்டமா?.. பதிவான சிசிடிவி காட்சியால் பீதியில் இருக்கும் மக்கள்!

 

செங்கல்பட்டில் சிறுத்தை நடமாட்டமா?.. பதிவான சிசிடிவி காட்சியால் பீதியில் இருக்கும் மக்கள்!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலின் காரணமாக அனைத்து வணிக வளாகங்களும் மூடப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலின் காரணமாக அனைத்து வணிக வளாகங்களும் மூடப்பட்டுள்ளன. அதே போல செங்கல்பட்டு  அஞ்சூர் வனப்பகுதி அருகே செயல்பட்டு வரும் மஹிந்திரா வேல்டு சிட்டி நிறுவனமும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா ஒன்றில் சிறுத்தை நடமாடுவது போன்ற காட்சி பதிவாகியுள்ளது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவ மக்கள் பெரும் பீதி அடைந்துள்ளனர். 

ttn

இதனையடுத்து வனத்துறையினர் அந்த சிசிடிவி காட்சிகளை சோதனை செய்து பார்த்ததில் அது காட்டுப்பூனை என்று கூறியுள்ளனர். மேலும், அப்பகுதியில் சிறுத்தை இருப்பது உண்மை தான் என்று கூறிய வனத்துறையினர் 6 வருடங்களுக்கு முன்னர் சிறுத்தை அங்கு சுற்றித் திரிந்ததாகவும் அதனை கண்காணிக்க தான் சிசிடிசி கேமரா பொருத்தப்பட்டதாகவும் சிறுத்தையை பிடிக்க 5 குண்டுகள் வைக்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர். ஆனால் அந்த சிறுத்தை இன்னும் பிடிக்கப்படாததால், இந்த சிசிடிவியில் பதிவாகி இருப்பது அந்த சிறுத்தையாக இருக்குமோ என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.