செக்ஸ் தொல்லை, பாலியல் வழக்கு, சிக்கும் பாஜக தலைவர்கள்! அப்செட்டான மோடி!

 

செக்ஸ் தொல்லை, பாலியல் வழக்கு, சிக்கும் பாஜக தலைவர்கள்! அப்செட்டான மோடி!

இந்தியாவின் பிரதமராக இரண்டாவது முறையாக மோடி பதவியேற்றதில் இருந்தே தொடர்ந்து பாஜக தலைவர்களும், தொண்டர்களும் பாலியல் சர்ச்சைகளில் தொடர்ந்து சிக்கி வருகின்றனர். பா.ஜ.க ஆட்சியில் இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்செயல்களில், குறிப்பாக பாஜகவினர் அதிகளவில் ஈடுபடுவதாக பொதுமக்களிடம் இருந்து புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. 

இந்தியாவின் பிரதமராக இரண்டாவது முறையாக மோடி பதவியேற்றதில் இருந்தே தொடர்ந்து பாஜக தலைவர்களும், தொண்டர்களும் பாலியல் சர்ச்சைகளில் தொடர்ந்து சிக்கி வருகின்றனர். பா.ஜ.க ஆட்சியில் இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்செயல்களில், குறிப்பாக பாஜகவினர் அதிகளவில் ஈடுபடுவதாக பொதுமக்களிடம் இருந்து புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. 

kuldeep singh

உத்தர பிரதேச மாநிலத்தின் பா.ஜ.க எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய உன்னாவோ பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தாலும் முக்கிய குற்றவாளியாக கருதப்படுபவர் குல்தீப். டெல்லியில் முன்னாள் பா.ஜ.க எம்.எல்.ஏ மீது, அவரது சொந்த மருமகளே செக்ஸ் புகார்களைக் கொடுத்த சம்பவம் டெல்லி பாஜக தலைவர்களிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
பா.ஜ.கவைச் சேர்ந்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் சுவாமி சின்மயானந்த் மாணவிகளை மிரட்டி, தொடர்ந்து பாலியல் பலாத்காரமும், கொடுமைகளும் செய்வதாக சட்டக்கல்லூரி மாணவி புகார் அளித்ததின் அடிப்படையில் அவர், கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் இருக்கிறார். அவருக்கு எதிராக பல வீடியோ ஆதாரங்களையும் கொடுத்திருக்கிறார் அந்த மாணவி.  
இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநில பிற்படுத்தப்பட்டோருக்கான நிதி மற்றும் வளர்ச்சித் துறையின் தலைவராக இருக்கும் பாபுராம் நிசாத், தன்னை அடித்து துன்புறுத்துவதாக அவரது மனைவி நீது நிசாத், முகநூலில் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருக்கிறார். 

swami

ஒரு பெண், பகிரங்கமாக, பாஜக தலைவரான, எனது கணவர் என்னை கொடுமைப்படுத்துகிறார், துப்பாக்கியால் மிரட்டிகிறார், யாராவது காப்பாற்றுங்கள் என்று மோடிக்கு வேண்டுகோள் வைத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இது தொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, “என்னுடைய கணவர் என்னை அடித்துத் துன்புறுத்தி, என்னை சுட்டுக் கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார். இதுகுறித்து, பலமுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தும், அவர்கள் நடவடிக்கை எடுக்காமல், புகாரையும் பெற்றுக் கொள்ளாமல், இது குடும்பப் பிரச்சனை, பேசி சமாதானம் செய்து கொள்ளுங்கள் என்று கூறுகின்றனர். எனக்குத் திருமணமாகி 14 வருடங்கள் ஆகிறது. திருமணமானதிலிருந்தே அவர், என்னைத் துன்புறுத்தி, துப்பாக்கி முனையில் மிரட்டி, என் மீது சிறுநீர் கழித்து அவமானப்படுத்தியும் வருகிறார். என்னுடைய சகோதரர்கள், பெற்றோர்களையும் கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்” என கண்ணீருடன் மனைவி நீது நிசாத் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இந்தச் சம்பவத்தில் பிரதமர் மோடியும், முதல்வர் ஆதித்யநாத்தும் தலையிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

modi

நாடு முழுவதுமே பாஜக தலைவர்கள் இப்படி செக்ஸ் அட்டூழியங்களிலும், பாலியல் வழக்குகளிலும் சிக்குவது மக்களிடையே பாஜக மீது மேலும் அவநம்பிக்கையையும், எரிச்சலையும் ஏற்படுத்துவதாக உள்ளது. இது குறித்து மோடியின் கவனத்திற்கு கொண்டு சென்ற போது, மோடி மிகவும் வருத்தப்பட்டு அப்செட் ஆனதாகவும் கூறப்படுகிறது. நாட்டில், பாஜக மீது மக்களுக்கு அதிக நம்பிக்கை வர வேண்டும், நல்லாட்சியைத் தர வேண்டும் என்று ஒவ்வொரு விஷயத்தையும் மக்கள் நலனை யோசித்து மத்திய அரசு திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், இவர்கள் ஏன் இப்படி கீழ்தரமாக நடந்துக் கொள்கிறார்கள் என்று மோடி வருத்தப்பட்டதாக கூறப்படுகிறது!