சூலூர் அதிமுக எம்.எல்.ஏ மாரடைப்பால் திடீர் மரணம்

 

சூலூர் அதிமுக எம்.எல்.ஏ மாரடைப்பால் திடீர் மரணம்

கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் இன்று காலை மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

கோவை :

கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் இன்று காலை மாரடைப்பால் மரணம் அடைந்தார். இவருக்கு வயது 64 . 

கோவை மாவட்டம் சூலூர் சுல்தான்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கனகராஜ். இவர் கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் கோவை மாவட்டம் சூலூர் தொகுதியில் போட்டியிட்டு 35 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் இன்று காலை எம்எல்ஏ கனகராஜ் திடீரென்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். காலையில் அவர் செய்தித்தாள் வாசித்துக் கொண்டு இருந்த போதே நெஞ்சுவலி ஏற்பட்டு இருக்கிறது.

இதையடுத்து மருத்துவமனைக்கு செல்லும் முன்னே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த மாரடைப்பு காரணமாக அவர் மருத்துவமனைக்கு செல்லும் முன்பே மரணம் அடைந்தார்.

இவரது உடல் சுல்தான்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது.  அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு மிகவும் நெருங்கிய நண்பர் எம்எல்ஏ கனகராஜ் என்பதும் குறிப்பிடத்தக்கது.