சூறைக்காற்றில் சிக்கிய 300 மீனவர்கள் ! 40 படகுகளின் கதி என்ன?

சூறைக்காற்றில் சிக்கிய 300 மீனவர்கள் ! 40 படகுகளின் கதி என்ன?

கோவா பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த குமரி மீனவர்கள் சூறைக் காற்றில் சிக்கியிருக்கலாம் என கருதப்படும் நிலையில் அவர்களையும் படகுகளையும் மீட்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கன்னியாகுமரி மேன்மடலாம் முதல் நீரோடி வரை உள்ள மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கேரளா மீன்பிடி துறைமுகங்களில் இருந்து சென்று ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர்.

fishermen

அரபிக்கடலில் உருவான சூறைக்காற்று புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் கோவா பகுதியில் இருந்து 40 விசைப்படகுகளில் சென்ற 300 மீனவர்கள் கரை ஒதுங்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சூறைக்காற்று வீசும் காரணத்தால் அதில் மீனவர்கள் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.
கோவா, மஹாராஷ்டிரா, கேரளா துறைமுகங்களில் சென்ற 800 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 10,000க்கும் மேற்பட்ட மீனவர்களும் பத்திரமாக கரை ஒதுங்கிவிட்டனர். ஆனால் குமரி மீனவர்களின் கதி என்னவாயிற்று என தெரியவில்லை.
எனவே மீனவர்களை மீட்க மத்திய மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெற்காசிய மீனவ தோழமை அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.  இந்திய கப்பல் படையை அனுப்பி மீனவர்களை தேட வேண்டும் என மீனவ அமைப்புகளும் கடலில் சிக்கியுள்ள மீனவர்களின் உறவினர்களும் கோரிக்கை வைத்தனர். குமரி மாவட்டத்தில் இன்று நடைபெறவிருந்த மீனவர்கள் குறைதீர் கூட்டம் ரத்து செய்யப்பட்டதுடன் காணாமல் போன மீனவர்கள் மற்றும் விசைப்படகுகள் குறித்த விவரங்களை சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.