சூறாவளி பிரசாரம்: வீடுவீடாக மேளம் கொட்டி ஓட்டு கேட்ட சுதீஷ்

 

சூறாவளி பிரசாரம்: வீடுவீடாக மேளம் கொட்டி ஓட்டு கேட்ட சுதீஷ்

 தேமுதிக வேட்பாளர் சுதீஷ், தங்கள் கட்சியின் சின்னமான முரசை  இசைத்து பொதுமக்களிடம் நூதன முறையில் வாக்கு சேகரித்தார்.

ஆத்தூர் : தேமுதிக வேட்பாளர் சுதீஷ், தங்கள் கட்சியின் சின்னமான முரசை  இசைத்து பொதுமக்களிடம் நூதன முறையில் வாக்கு சேகரித்தார்.

dmk

நெருங்கி வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் சூறாவளிப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளதால், கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த், விஜய் பிரபாகரன் உள்ளிட்டோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

premalatha

அந்த வரிசையில் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னதம்பியுடன் பரப்புரையில் ஈடுபட்ட தேமுதிக கட்சியின் துணை பொதுச்செயலாளர்  சுதீஷ், இருசக்கர வாகனத்தில் பயணித்தபடி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். பழனியாபுரி என்ற கிராமத்தில் பயணம் மேற்கொண்ட வேட்பாளர் சுதீஷ், முரசு இசையை இசைத்தபடி, வாக்கு சேகரித்தார். இவருடன்  அதிமுக நிர்வாகிகள் பலர்  மேளதாளத்துடன் வாக்கு  சேகரிக்க  சென்றார். மேலும் பொதுமக்களைக் கவர  வேட்பாளர் சுதிஷூம், ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர்  சின்னதம்பியும் சேர்ந்து மேளம் அடிப்பவர்களிடம் இருந்த மேளத்தை வாங்கி ஓட்டுக்கேட்டு அதகளப்படுத்தினர். 

sudhish

மக்களிடம் ஓட்டு வேட்டை நடத்த பிரதான அரசியல் கட்சி முதல் சுயேட்சை வேட்பாளர்கள் வாரி நூதன முறையை கையாண்டுவருவது தேர்தல் களத்தை சுவாரஸ்யமாக்கியுள்ளது. 
 

இதையும் வாசிக்க: இனிமேல் சென்ட்ரல் ரயில் நிலையம் இல்லங்க; பேரு நேத்து நைட்டே மாறி போச்சு!