சூர்யாவை அரசியலுக்கு அழைக்கும் நெட்டிசன்கள்…  ட்விட்டரில் ட்ரெண்டாகும் #StandWithSuriya, #SuryaFCWarnsBJPnADMK! 

சூர்யாவை அரசியலுக்கு அழைக்கும் நெட்டிசன்கள்…  ட்விட்டரில் ட்ரெண்டாகும் #StandWithSuriya, #SuryaFCWarnsBJPnADMK! 

நடிகர் சூர்யா சமீபத்தில் தான் நடத்தி வரும் அகரம் அறக்கட்டளையின் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நடிகர் சூர்யாவின் பேச்சிற்கு ட்விட்டரில்ல் ஆதரவு பெருகிகொண்டிருக்கிறது. நெட்டிசன்கள் #StandWithSuriya, #SuryaFCWarnsBJPnADMK என்ற ஹேஷ் டேக்கின் கீழ் பதிவிட்டு வருவதால் அந்த ஹேஷ்டேக் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது. 

s1

நடிகர் சூர்யா சமீபத்தில் தான் நடத்தி வரும் அகரம் அறக்கட்டளையின் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன்பின் விழாவில் பேசிய அவர், “ நீட் தேர்வு தேவையில்லாதது. புதிய கல்விக்கொள்கை குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தெரியவில்லை..  

s2

புதிய கல்விக்கொள்கை குறித்து சாமானிய மக்கள் பேசாதது வருத்தமளிக்கிறது. அனைவரும் அமைதியாக இருந்தால் புதிய கல்விக்கொள்கை வரைவு நம்மீது திணிக்கப்படும். ஆரம்பக் கல்வியிலேயே மூன்று மொழிகளை திணிக்கக் கூடாது. மாணவர்களால் அதை படிக்க முடியாது.

f

அதேபோல குறைவான ஆசிரியர்கள் கொண்ட பள்ளிகள் மூடப்படும் என்று கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைத்து இருப்பது சரியல்ல. அந்த பள்ளிகளை தரம் உயர்த்தாமல் பள்ளிகளை மூடினால் கிராமங்களில் இருக்கும் மாணவர்கள் எங்கு செல்வார்கள். இப்படி செய்தால் பள்ளியிலிருந்து இடைநிற்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.  

s5

ஆசிரியர்களே இல்லாமல் படிக்கும் மாணவர்கள் எப்படி நீட் உள்ளிட்ட தேர்வுகளை எழுத முடியும்.  அதிக தேர்வுகளை மாணவர்கள் மீது திணிக்கக்கூடாது” என பாஜகவையும், அதிமுக அரசையும் சாடினார். 

s7