சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ ரிலீஸ் தேதி தள்ளிப் போனது!?

 

சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ ரிலீஸ் தேதி தள்ளிப் போனது!?

தெலுங்கு நடிகர் மோகன் பாபு, நடிகை  அபர்ணா பாலமுரளி,  ஜாக்கி ஷெராப் உட்பட பலர் நடிக்கின்றனர்.  

நடிகர் சூர்யாவின்  ‘சூரரைப் போற்று’ ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

இறுதிச்சுற்று படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துவரும் திரைப்படம் சூரரைப் போற்று. இந்த படத்தில்  தெலுங்கு நடிகர் மோகன் பாபு, நடிகை  அபர்ணா பாலமுரளி,  ஜாக்கி ஷெராப் உட்பட பலர் நடிக்கின்றனர்.  

soorari potru

சூர்யாவின் 2 டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் சிக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு  ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். நிக்கேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்கிறார். இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கிய ஏர் டெக்கான் உரிமையாளர்  ஜி.ஆர்.கோபிநாத் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. ஆனால்  இது வாழ்க்கை  வரலாறு படமல்ல. 

soorari potru

இந்நிலையில் சூரரைப் போற்று படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வரும் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் டிசம்பர் மாதம் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளது.

soorari potru

இதனால் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கு அதிகநாள் எடுக்கும் என்பதால் இப்படத்தின் வெளியீட்டை படக்குழு அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு  ஒத்திவைக்கத்  திட்டமிட்டுள்ளதாகக் கோலிவுட்டில் பரவலாகப் பேசப்படுகிறது.