சூர்யாவின் என்.ஜி.கேவுடன் இணைந்த தம்பி கார்த்தியின் கைதி!

 

சூர்யாவின் என்.ஜி.கேவுடன் இணைந்த தம்பி கார்த்தியின் கைதி!

சூர்யாவின் என்.ஜி.கே படம் வெளியாகும் திரையரங்குகளில் கார்த்தியின் கைதி படத்தின் டீஸர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை: சூர்யாவின் என்.ஜி.கே படம் வெளியாகும் திரையரங்குகளில் கார்த்தியின் கைதி படத்தின் டீஸர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

சூர்யா- செல்வராகவன் கூட்டணியில் உருவாகியுள்ள  என்.ஜி.கே திரைப்படம் வரும் 31ம் தேதி வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் முன்பதிவு தொடங்கி டிக்கெட்டுகள் விற்று தீர்ந்ததால், இப்படம் வசூலில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

surya

இதற்கிடையில் ‘என்.ஜி.கே. வெளியாகும் திரையரங்குகள் அனைத்திலும் கார்த்தி நடித்து முடித்துள்ள ‘கைதி’ படத்தின் டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் என்.ஜி.கே மற்றும் கைதி ஆகிய இரண்டு படங்களையும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கார்த்தியின் கைதி திரைப்படம் விறுவிறுப்பாக சார்பென்ஸ் திரைப்படமாக உருவாகியுள்ளது. இதை ‘மாநகரம்’ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இப்படம் ஜூலை மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.