சூரிய கிரகணத்தின் போது கண்டிப்பாக என்னவெல்லாம் செய்யக்கூடாது!

 

சூரிய கிரகணத்தின் போது கண்டிப்பாக என்னவெல்லாம் செய்யக்கூடாது!

நாளை நிகழ இருக்கும் சூரியகிரகணம் மொத்தமாக நான்கு நிமிடம் முப்பத்து மூன்று வினாடிகள் வரையில் நடைபெறும். சூரிய கிரகணம்  அமெரிக்க நேரப்படி 12.55 மதியம் நிகழும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை, ஜூலை 2ம் தேதி முழு சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த வருடத்தின் இறுதி சூரிய கிரகணம் இது தான்.  இந்த சூரிய கிரகணம் தென் பசிபிக் பிராந்தியத்தில்  நிகழும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாகவே கிரகணங்கள் நிகழும் போது, அதன் தாக்கம் நிச்சயமாக பூமியில் ஏற்படும். இந்நிலையில் நாளை நிகழ இருக்கும் சூரிய கிரகணமும் நம்மிடையே உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும், தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது தான்.  சூரிய கிரகண நேரத்தின் போது நாம்  செய்யக்கூடாத செயல்களைப் பார்க்கலாம். 

solar eclipse

நாளை நிகழ இருக்கும் சூரியகிரகணம் மொத்தமாக நான்கு நிமிடம் முப்பத்து மூன்று வினாடிகள் வரையில் நடைபெறும். சூரிய கிரகணம்  அமெரிக்க நேரப்படி 12.55 மதியம் நிகழும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நேரத்தின்படி இரவு 10.25 மணிக்கும் நிகழும் என்பதனால் நம் நாட்டில் இந்த சூரிய கிரகணத்தைப் பார்க்க இயலாது. 
பொதுவாக, எந்த கிரகணமாக இருந்தாலும், அது நிகழ்ந்து முடிந்தவுடன் நாம் வசிக்கும் இடத்தைக் கழுவி துடைக்க வேண்டும்.  எனவே சூரிய கிரகணம் நிகழ்ந்தவுடன், காலையில் வீட்டை கழுவித் துடைக்க வேண்டும்.
கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் போன்றோரை எளிதில் கிரகணத்தின் கதிர்கள் தாக்கும் என்பதால், இவர்கள் கிரகண காலத்தில் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது.

solar eclipse

கிரகணத்திற்கு முன்பாக சமைத்த எந்த உணவையும் உண்ணக் கூடாது. அதனால் கிரகணத்தன்று இரவு 10 மணிக்குள் உங்களது இரவு உணவை முடித்து விடுங்கள். எந்த உணவுப் பொருட்களையும் திறந்து வைக்காதீர்கள். கிரகணத்தின் போது வரும் கதிர்வீச்சுக்கள் உணவைத் தாக்கும் வல்லமை உடையவை. அப்படியும் பிடித்து வைத்த தண்ணீர் போன்றப் பொருட்களை தவிர்க்க முடியாது என்பதால், அவற்றில் ஒரு துளசி இலையைப் போட்டு, பின்னர் பயன்படுத்தலாம். 
கிரகண  காலத்தில், உணவை மட்டுமல்லாமல், கூடுமானவரை நீர் அருந்துவதையும் தவிர்த்து விடுங்கள். 
கிரகண நாளில், எந்தவொரு புனிதமான செயல்களைச் செய்யக் கூடாது. அன்று முழுவதுமே சூரியனும், சந்திரனும் பலமிழந்து இருப்பதால், புதிய செயல்களுக்கு உகந்த நாளாக இருக்காது. 
எக்காரணம் கொண்டும்  சூரிய கிரகணத்தைப் பார்க்கக் கூடாது