சூரிய கிரகணத்தின்போது நேராக நின்ற அம்மி, உலக்கைகள்!! 

 

சூரிய கிரகணத்தின்போது நேராக நின்ற அம்மி, உலக்கைகள்!! 

சூரிய கிரகணத்தின்போது தண்ணீர் தாம்பாலத்தில் உலக்கையை நிற்க வைக்கும் விநோத நடவடிக்கைகளில் கிராம மக்கள் ஈடுபட்டனர். 

சூரிய கிரகணத்தின்போது தண்ணீர் தாம்பாலத்தில் உலக்கையை நிற்க வைக்கும் விநோத நடவடிக்கைகளில் கிராம மக்கள் ஈடுபட்டனர். 

அரிய வானியல் நிகழ்வான நெருப்பு வளைய சூரிய கிரகணம் இன்று தமிழகத்திலும், வெளிநாடுகளில் நிகழ்ந்தது. இதனை பல்வேறு தரப்பினரும் கண்டுகளித்தனர். காலை 8.09 மணிக்கு தொடங்கிய கிரகணம் 11.20 வரை நிகழ்ந்தது. இதேபோன்ற அடுத்த சூரிய கிரகணம் தமிழகத்தில் 2031 ஆம் ஆண்டு தான் நிகழ வாய்ப்புள்ளதாக அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உலக்கை

இந்நிலையில் தமிழகத்திலுள்ள திண்டுக்கல், கடலூர் மற்றும் நாமக்கல் மாவட்டத்திலுள்ள கிராமங்களில், அப்பகுதி மக்கள் தண்ணீர் பாத்திரத்திலோ அல்லது தாம்பாலத்திலோ உலக்கையை நேராக முயற்சித்தனர். சூரிய கிரகணம் தொடங்கி முடியும்வரை அந்த உலக்கை நேராக நின்றதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். நின்றிருந்த உலக்கையை சுற்றிக் கும்மியடித்துக் குலவையிட்டு சூரிய கிரகணத்தை வழிபட்டனர். இதேபோல் சில கிராமங்களில் அம்மிக்கல்லை நேராக நிற்க வைத்தனர். இவை தமிழர்களின் பாரம்பரிய நடவடிக்கை என்றும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.