சூரிய கிரகணத்தின்போது சாலைகளில் முட்டைகளை நிற்க வைத்த வெளிநாடுவாழ் கூமுட்டைகள்! 

சூரிய கிரகணத்தின்போது சாலைகளில் முட்டைகளை நிற்க வைத்த வெளிநாடுவாழ் கூமுட்டைகள்! 

சூரிய கிரகணத்தின்போது தமிழகத்தில் உலக்கை, அம்மி ஆகியவற்றை நேராக நிற்க வைத்தது போல மலேசியாவில் முட்டைகளை நிற்க வைத்த சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

சூரிய கிரகணத்தின்போது தமிழகத்தில் உலக்கை, அம்மி ஆகியவற்றை நேராக நிற்க வைத்தது போல மலேசியாவில் முட்டைகளை நிற்க வைத்த சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரிய வானியல் நிகழ்வான நெருப்பு வளைய சூரிய கிரகணம் இன்று தமிழகத்திலும், வெளிநாடுகளில் நிகழ்ந்தது. இதனை பல்வேறு தரப்பினரும் கண்டுகளித்தனர். காலை 8.09 மணிக்கு தொடங்கிய கிரகணம் 11.20 வரை நிகழ்ந்தது. இதேபோன்ற அடுத்த சூரிய கிரகணம் தமிழகத்தில் 2031 ஆம் ஆண்டு தான் நிகழ வாய்ப்புள்ளதாக அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். தமிழகம் மட்டுமின்றி, சவுதி அரேபியா, துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும் தெளிவாக தெரிந்தது.

Egg-Standing
கோலம்பூரிலுள்ள குடியிருப்புவாசிகள் முட்டைகளை சாலைகளில் நேராக நிற்க வைத்தனர். சூரியனை நிலா மறைக்கும்போது, ஈர்ப்பு விசை அதிகரிக்கும் இதன்காரணமாக முட்டை நேராக நிற்கும் என கூறப்படுகிறது. இதனால் சாலையில் முட்டையை நிற்கவைத்து அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். 

இதுகுறித்து அறிவியாளர்கள் கூறுகையில்,  “இதுபோன்ற செயல்கள் காமெடிக்காகவும், வேடிக்கைகாகவும் நடத்தப்படுகின்றன. உண்மையில் முட்டை எந்தவித ஆதாரமும் இல்லை நேராக நிற்காது. இதுபோன்ற செயல்கள் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் அறிவியல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன” என கருத்து தெரிவிக்கின்றனர்.