சூரியாவின் அடுத்தபடம் பழிவாங்கல் கதையா?

சூரியாவின் அடுத்தபடம் பழிவாங்கல் கதையா?

அசுரன் வெற்றிக்குப் பிறகு சத்தமில்லாமல் நாயகனாக சூரியை வைத்து ஒரு படம் எடுத்துக்கொண்டு இருக்கிறார் வெற்றிமாறன்.அவர் கலைபுலி தானுவிற்காக அடுத்து இயக்கப் போகும் படத்தில் வெற்றி மாறனும்  சூரியாவும் இணைகிறார்கள்.

vetrimaaran

இது ஒரு பழிவாங்கும் கதை என்று இப்போதே பேச்சுக் கிளம்பிவிட்டது. அது ஒருவகையில் உண்மைதான், வாடிவாசல் என்கிற கதையின் மையப்புள்ளி அதுதான். 58 வருடம் முன்பு சி.சு செல்லப்பா எழுதிய 70 பக்க குறுநாவல் அது. செல்லாயி அம்மன் கோவில்தான் கதைக்களம். பிச்சி, மருதன் என்று இரண்டு இளைஞர்கள், ஜல்லிக்கட்டின் நுணுக்கங்கள் அறிந்த ஒரு கிழவன். ஒரு ஜமீன்தார், அவர் வளர்க்கும் காரி என்கிற காளை இவ்வளவுதான் கதாபாத்திரங்கள். 

jallikattu-kaalai

காரி என்கிற காளை பிச்சியின் அப்பனை ஜல்லிக் கட்டில் கொன்றுவிட்டது. அதனால், காரியை வென்று தன் தந்தையின் பெயருக்கு நேர்ந்த களங்கத்தை துடைக்க நினைக்கிறான் மகன், அதை சாதித்தானா, இடையில் எதை எல்லாம் அவன்  எதிர்கொள்ள வேண்டி வந்தது என்பதுதான் கதை.
ஆக, இது பழிவாங்கும் கதைதான், ஆனால் வில்லன் ஒரு காளை என்பதுதான் சிறப்பு!.