சூரியனிலிருந்து ஓம் என்ற சப்தம்! – ட்விட்டரில் வசமாக சிக்கிய கிரண் பேடி

 

சூரியனிலிருந்து ஓம் என்ற சப்தம்! – ட்விட்டரில் வசமாக சிக்கிய கிரண் பேடி

சூரியனிலிருந்து ஓம் என்ற சப்தம் கேட்பதாக புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி ட்வீட் செய்திருப்பது பலரையும் சிரிக்க வைத்துள்ளது.

kiran

திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் மேல் பறக்கும்போது செயற்கைக்கோள்கள் செயலிழந்துவிடுகின்றன, வாகனங்களில் எலுமிச்சை பழம், பச்சைமிளகாய் கட்டுவது ஓட்டுநரைத் தூங்கவிடாமல் செய்வதற்காக என்று நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை தலைப்பிட்டு சமூக ஊடகங்களில் பல வதந்திகள் பரவுகின்றன. அப்படி சமூக ஊடகங்களில் பரவும் வதந்தி ஒன்றைப் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி ட்விட்டரில் வெளியிட்டுள்ளது பலரின் நகைப்புக்கும் ஆளாகியுள்ளது.

kiran

கிரண் பேடி வெளியிட்ட பதிவில், “அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா சூரியனிலிருந்து எப்படிப்படச் சப்தம் வெளியாகிறது என்று ஆய்வு செய்தது. அப்போது சூரியன் ஓம் என்ற சப்தத்தை வெளிப்படுத்துவதைப் பாருங்கள்” என்று வீடியோவை வெளியிட்டுள்ளார்.

சுமார் 2 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில் ஓம், ஓம் என்று சத்தம் வருகிறது. இது போலியான வீடியோ என்றும், பல ஆண்டுகளாக இது சமூக ஊடகங்களில் வலம் வருகிறது என்றும் சிலர் கமெண்ட் பகுதியில் பதிவிட்டுள்ளனர். ஒரு சிலர் ஆளுநராக இருந்துகொண்டு இப்படி பொய்யான செய்தியை பரப்பலாமா என்று கலாய்த்து பதிவிட்டு வருகின்றனர். 
கிரண் பேடி இப்படி போலியான தகவலை பரப்புவது இது முதல் முறை இல்லை. மோடியின் அம்மா என்று ஒரு முறை வீடியோ வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.