சூரத் தீ விபத்து: உயிரை பணயம் வைத்து பெண்களை காப்பாற்றிய ரியல் ஹீரோ: குவியும் பாராட்டு!

 

சூரத்  தீ விபத்து: உயிரை பணயம் வைத்து பெண்களை காப்பாற்றிய ரியல் ஹீரோ: குவியும் பாராட்டு!

பயிற்சி மையத்தில் பிடித்த திடீர் தீயில் சிக்கிய பெண்களை  இளைஞர் ஒருவர் பத்திரமாக மீட்டுள்ள  சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சூரத்: பயிற்சி மையத்தில் பிடித்த திடீர் தீயில் சிக்கிய பெண்களை  இளைஞர் ஒருவர் பத்திரமாக மீட்டுள்ள  சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள சர்தானா பகுதியில் உள்ள காம்ப்ளக்ஸ் நான்கு மாடி கட்டிடம் கொண்டது.  இதில் 4வது மாடியில் பள்ளி விடுமுறையில் இருக்கும் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு முடித்துள்ள மாணவ மாணவிகள் பயிற்சி வகுப்புகளுக்கு வந்தனர்.

surat

நேற்று மதியம்  4 வது மாடியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீயானது மூன்றாவது மாடிக்கும் பரவியதால் மாணவ மாணவிகள் செய்வதறியாது திகைத்தனர். அங்கிருந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். இதனிடையே உயிர் பிழைப்பதற்காக மாணவர்கள் சிலர் மாடிகளிலிருந்து கீழே குதித்தனர்.இதில் உடல் சிதறியும், தீ விபத்தில் உடல் கருகியும் 20 மாணவ மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

surat

இங்கு மீட்புப்பணிகளைத் துரிதப்படுத்த உத்தரவிட்டுள்ள அம்மாநில முதல்வர்  விஜய் ரூபானி, விபத்தில் பலியானவர்களுக்கு தலா ரூ.4 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். 

இந்நிலையில் இந்த விபத்தின் போது கேடன் ஜோரவத்யா என்ற இளைஞர் தன் உயிரை பணயம் வைத்து இரண்டு பெண்களை காப்பாற்றியுள்ளார். கட்டடத்தின் பக்கவாட்டில் ஏறி, கீழே குதிக்கும் பெண்களைப் பத்திரமாக மீட்டுள்ளார். தீயின் அனலை பொறுத்துக் கொண்டு பெண்களை காப்பாற்றிய  கேடன் ஜோரவத்யாவுக்கு   சமூக வலைதளங்களில்  பாராட்டுக்கள் குவிகின்றன.