சூரத்தில் புலம்பெயர்ந்தோர் – போலீசார் மோதல்…கற்கள் வீசியதால் கண்ணீர் புகைக் குண்டு வீச்சு!

 

சூரத்தில் புலம்பெயர்ந்தோர் – போலீசார் மோதல்…கற்கள் வீசியதால் கண்ணீர் புகைக் குண்டு வீச்சு!

போலீசாருக்கும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் இடையே சூரத்தில் கடும் மோதல் ஏற்பட்டது.

சூரத்: போலீசாருக்கும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் இடையே சூரத்தில் கடும் மோதல் ஏற்பட்டது.

குஜராத்தின் சூரத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குழு இன்று போலீசாருடன் மோதியது. தொழிலாளர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட வேண்டும் என்று அவர்கள் தொடர்ந்து போலீசாரிடம் கேட்டு வருகின்றனர். சூரத்தில் தொழில் நிமித்தமாக புலம்பெயர்ந்தோர் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் நான்காவது நிகழ்வு இதுவாகும். வைர மற்றும் ஜவுளித் தொழில்களில் பணியாற்றுவதற்காக ஏராளமான தொழிலாளர்கள் பிற மாநிலங்களிலிருந்து சூரத் வருகிறார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர்ந்தோர் சூரத்தின் புறநகரில் உள்ள வரேலியில் உள்ள சந்தை பகுதிக்கு வெளியே கூடியிருந்தனர். கும்பலை அமைதிப்படுத்த காவல்துறையினர் வரவழைக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் வந்ததும் அங்கிருந்த மக்கள் கோபத்துடன் போலீசாரை நோக்கி கற்களை வீசத் தொடங்கினர். இதனால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளைப் பயன்படுத்தினர். இதனால் அப்பகுதி போர்க்களம் போல பரபரப்பாக காணப்பட்டது.