சூப்பர் ஸ்டார் வீட்டில் டும் டும் டும் : திருமணத்திற்கு தயாராகும் சௌந்தர்யா ரஜினிகாந்த்?

 

சூப்பர் ஸ்டார்  வீட்டில் டும் டும் டும் : திருமணத்திற்கு தயாராகும் சௌந்தர்யா ரஜினிகாந்த்?

நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யாவுக்கும் பிரபல தொழிலதிபரின் மகனுக்கும் நிச்சயம் முடிந்துள்ளதாகவும், விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யாவுக்கும் பிரபல தொழிலதிபரின் மகனுக்கும் நிச்சயம் முடிந்துள்ளதாகவும், விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகளும், இயக்குநருமான சௌந்தர்யா ரஜினிகாந்த், கடந்த 2010ம் ஆண்டு தொழிலதிபர் அஸ்வினை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர். அதன்பின் தன் மகனுடன் ரஜினிகாந்தின் போயஸ் தோட்ட இல்லத்தில் சௌந்தர்யா வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் இவருக்கும்  பிரபல தொழிலதிபர் மகனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இருவீட்டார் சம்மதத்துடன் வரும் ஜனவரி மாதத்தில் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.