சூப்பர் ஸ்டார் ரஜினி… ‘தல’ அஜித் இவர்களுக்கு முன்னோடியாக இருந்த நடிகர் ரங்காராவ்… அதிர்ச்சியூட்டும்  ரகசியங்கள்!?

 

சூப்பர் ஸ்டார் ரஜினி… ‘தல’ அஜித் இவர்களுக்கு முன்னோடியாக இருந்த நடிகர் ரங்காராவ்… அதிர்ச்சியூட்டும்  ரகசியங்கள்!?

கிளாசிக் சினிமா பார்க்கிறவர்கள் இப்பவும் அடிக்கடி பார்க்கிற பாடல்களின் பட்டியலில் ‘அன்பு சகோதரர்கள்’[படத்தில் வந்த ‘முத்துக்கு முத்தாக… சொத்துக்கு சொத்தாக … அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் ஒண்ணுக்குள் ஒண்ணாக …’ என்ற பாடல் கண்டிப்பாக இருக்கும்.அந்தக் காலத்தில் அவரை தமிழ் நடிகர் என்று நம்பியவர்களும் உண்டு! உண்மையில் அவர் தெலுங்கு நடிகர்.அவரது முழு பெயர்- சாமரல வெங்கட்ட ரங்காராவ்.அதன் சுருக்கம்தான்  எஸ்.வி ரங்காராவ்.இவர் நடித்த  முதல் படம் பாதாளபைரவி.என்.டி.ராமாராவ் கதாநாயகனாக நடித்த அந்தப்படத்தில் ரங்காராவ்  பயங்கர நேபாள தேசத்து மந்திரவாதியாக அறிமுகமாகி ஒரே இரவில் புகழின் உச்சம் தொட்டவர்.

கிளாசிக் சினிமா பார்க்கிறவர்கள் இப்பவும் அடிக்கடி பார்க்கிற பாடல்களின் பட்டியலில் ‘அன்பு சகோதரர்கள்’[படத்தில் வந்த ‘முத்துக்கு முத்தாக… சொத்துக்கு சொத்தாக … அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் ஒண்ணுக்குள் ஒண்ணாக …’ என்ற பாடல் கண்டிப்பாக இருக்கும்.அந்தக் காலத்தில் அவரை தமிழ் நடிகர் என்று நம்பியவர்களும் உண்டு! உண்மையில் அவர் தெலுங்கு நடிகர்.அவரது முழு பெயர்- சாமரல வெங்கட்ட ரங்காராவ்.அதன் சுருக்கம்தான்  எஸ்.வி ரங்காராவ்.இவர் நடித்த  முதல் படம் பாதாளபைரவி.என்.டி.ராமாராவ் கதாநாயகனாக நடித்த அந்தப்படத்தில் ரங்காராவ்  பயங்கர நேபாள தேசத்து மந்திரவாதியாக அறிமுகமாகி ஒரே இரவில் புகழின் உச்சம் தொட்டவர்.

rangarao

கல்யாண சமையல் சாதம் என்ற மாயாபஜார் படப்பாடலில் கடோத் கஜன் என்கிற அரக்கனாக வந்து அவர் கல்யாண விருந்தை காலி செய்வார்.
அரக்கனாக மட்டுமல்ல,’எங்கிருந்தோ வந்தான் கண்ணன்’ ( படிக்காத மேதை)
என்று தத்துப்பள்ளையின் பிரிவில் கலங்கி ரசிகர்களை கண்ணீர் சிந்தவும் வைத்திருக்கிறார்.

எங்கள் வீட்டுப் பிள்ளையில் செல்ல மகள் சரோஜா தேவிக்கு பயப்படும் அப்பாவாக நடித்து ரசிகர்களை சிரிக்கவும் வைத்திருக்கிறார்.
அவரைத் தெலுங்கு தேச மக்கள் ‘ விஸ்வநட சக்கரவர்த்தி’ என்று அழைத்தார்கள்.இன்று ‘ மெத்தட் ஆக்டிங்’ என்று பேசப்படும் நடிப்புக்கலையை இந்திய சினிமாவில் அறிமுகம் செய்தவர் என்று தாராளமாக எஸ்.வி.ஆரைச் சொல்லலாம்.

ranga rao

ஹீரோக்களைத் தாண்டி அவரது ஆஜானுபாகுவான ஆறடி உயரம் காரணமாக பர்க்லே சிகரட் போன்ற விளம்பரங்களில் தோன்றினார். தமிழிலும் தெலுங்கிலும் 200க்கும்  மேற்பட்ட படங்களில் நடித்த ரங்கா ராவுக்கு ஒரு வினோத பழக்கம் இருந்தது.மீண்டும் மீண்டும் ஒரே மாதிரி கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டி வந்தபோது அதில் இருந்து தப்பிக்க அவர் கண்டுபிடித்த வழிதான் அந்த ரகசிய பதுங்கு குழி ஐடியா.

ரங்காராவ் தனது வீட்டில்.ஒரு பாதாள அறை கட்டி வைத்து இருந்தாராம்.சினிமா சலிக்கும் போது அந்த பாதாள அறைக்குள் போய் செட்டிலாகி விடுவாராம்.
சமயத்தில் ஆறுமாதம் வரைக்கூட வெளியே வராமல் அந்த நிலவரையிலேயே இருப்பாராம்.அவர் அந்த பாதாள அறையிலேயே இருக்கும்போது
சாப்பாடு முதல் ‘சகலமும்’ மேலிருந்து அங்கே அனுப்பப்படும். மேலே வரவே மாட்டாராம்.

rangaa rao

அப்படி ரங்காராவ் ஹைபர்நேஷன் மோடுக்குப் போய்விட்ட ஒரு சந்தர்ப்பத்தில் என்.டி.ராமாராவ் ராமாயண பின்னணியில் ஒரு படம் செய்ய முடிவு செய்கிறார்.
அதில் ராவணன் வேடம் செய்ய ரங்காராவ்தான் வேண்டும் என்று என்.டி.ஆர் உறுதியாக சொல்லிவிட , அவரது நண்பர்கள் ரங்காராவ் வீட்டுக்கு என்.டி.ராமாராவை அழைத்து வந்தார்கள்

பாதாள பைரவியில் தன்னுடன் நடித்த என்.டி.ஆர் தனது பாதாள அறையில் இருந்து, ஆறடி உயர எலும்புக் கூடாக மார்புவரைத் தாடியோடு வெளியே வந்ததைப் பார்த்த என்.டி.ஆர் நண்பர்கள் ‘ இந்த எலும்புக் கூடா ராவணன் ‘ என்று கேட்டார்களாம்.

அதற்கு என்.டி.ஆர் ,ஒரு பதிலும் சொல்லாமல் ஒரு அலட்சிய சிரிப்புடன், ரங்காராவுக்கு அட்வான்ஸ் கொடுத்து விட்டு கிளம்பி விட்டாராம்.
ஒரு மாதம் கழித்து,படத்தின் பூஜைக்கு ராவணன் கெட்- அப்பில் வந்து இறங்கிய ரங்காராவைப் பார்த்த என்.டி.ஆரின் நண்பர்கள் வாயடைத்துப் போய் விட்டார்களாம்.அன்று தாங்கள் பார்த்த எலும்புக் கூடான உருவம்தானா இது என்று அவர்கள் அதிசயிக்கும் படியான ராவணனாக வந்து நின்றாராம் ரங்காராவ். தன் நண்பர்களிடம் அவரை காட்டி,இப்படிப்பட்ட ராவணனுடன் மோதுவதுதான் ராமனுக்குப் பெருமை என்றாராம் என்.டி.ஆர்.

rangarao

ரங்காராவ் பற்றி அதிகம் அறியப்படாத பல செய்திகள் உண்டு.உதாரணமாக சர்வதேச படவிழாவில் சிறந்த நடிகர் விருது பெற்ற முதல் இந்திய நடிகர் அவர்தான்.ஜகார்த்தாவில் நடந்த படவிழாவில் நர்த்தன சாலா ( narthanasala) என்ற படத்தில் கீசகனாக நடித்ததற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
இது தவிர சிறந்த நடிகருக்கான ஜனாதிபதி அவார்டு ஐந்து முறை அவருக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. ஆந்திர அரசின் நந்தி அவார்டுகளை இரண்டு முறை வென்றிருக்கிறார்.இரண்டு ஃபிலிம்ஃபேர் விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

நடிகராக மட்டுமல்லாமல் இயக்குநராகவும் தன் திறமையை காட்டி இருக்கிறார் .ரங்காராவ்.பந்தவ்யாலு ( Bandhavyalu) மற்றும் சந்தராங்கம் (Chandarangam) என்று இரண்டு படங்களை இயக்கி இருக்கும் ரங்காராவ்,அதில் சந்தராங்கம் படத்துக்குகாக ஆந்திர அரசின் நந்தி விருதையும் பெற்றிருக்கிறார்.

rajini and ajith

இன்று ,ரஜினி ஒரு படம் முடித்து விட்டால் இமயமலையில். இருக்கும் பாபா ஆசிரமத்துக்குப் போகிறார். அஜித் விமானன் ஓட்டப் போகிறார். இதற்கு எல்லாமே அலுப்பூட்டும் ஒரே மாதிரியான திரையுலக வாழ்க்கையில் இருந்து சில தினங்களாவது விலகி இருக்கலாம்.வித்தியாசமாக வாழலாம் என்கிற ஆசைதான் காரணம்.

ஆனால் இதே மனநிலை கொண்ட ஒரு நடிகர் 50 வருடம் முன்பே வாழ்ந்தார்.இவர்களை விட எளிய.வாழ்க்கையை தனக்குத்தானே சிருஷ்டித்துக் கொண்டார் என்பதன் உதாரணமாக இருந்திருக்கிறார் ரங்காராவ்.