சூப்பர் ஸ்டார் ரஜினியின் முதல் கன்னடப்படம்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் முதல் கன்னடப்படம்

கன்னட நாடக மேடையில் ரஜினிக்கு ஏற்கனவே நல்ல அனுபவம் இருந்தது.அவர் துரியோதனன் வேடத்தில் நடித்ததை இப்போதும் நினைவு வைத்திருக்கும் ரசிகர்கள் அவருக்கு உண்டு.ஆனாலும் தமிழில் அபூர்வராகங்கள் படத்திற்குப் பிறகுதான் அவருக்கு கன்னட சினிமா வாய்ப்பு வந்தது.

rajini

புட்டண்ணா கனகல் இயக்கிய கதாசங்கம் தான் அவருக்கு கன்னடத்தில் முதல் படம்.1976-ல் வெளி வந்த இந்தப் படத்தில் ஒரு புதுமை செய்திருந்தார் புட்டண்ணா கனகல்.கிராடி கோவிந்தராஜ் எழுதிய ஹிங்கு,வீணா எழுதிய அதிதி,ஈஸ்வரச்சந்திராவின் முனித்தாயி என்கிற மூன்று கதைகளை கொண்ட படம் அது.

கல்யாண் குமார்,சரோஜா தேவி,ரஜினி,ஆர்த்தி நடித்த அந்தப்படம் வெற்றியை மட்டுமல்ல விருதுகளையும் குவித்தது.இந்த மூன்று கதைகளில் ஒன்றான முனித்தாயி என்கிற கதையைத்தான் ‘ கை கொடுக்கும் கை’ என்கிற பெயரில் மறுபடி தமிழிலும் எடுத்தார்கள்.