சூப்பர் ஸ்டார் ரஜினியின் தர்பார் ஆரம்பம்…அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

 

சூப்பர் ஸ்டார் ரஜினியின் தர்பார் ஆரம்பம்…அசத்தலான ஃபர்ஸ்ட்  லுக் போஸ்டர்

முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

சென்னை: முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 167வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

பேட்ட படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும்  இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளார். 

நாளை (ஏப்ரல் 10) மும்பையில் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இணையத்தில் படக்குழு வெளியிட்டுள்ளது. ‘தர்பார்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடிக்கவுள்ளார். மேலும், 2020-ம் ஆண்டு பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. 

அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் இதில் யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

முன்னதாக, இப்படத்தின் போட்டோ ஷூட் நடைபெற்றது. அப்போதே ரஜினி போலீஸ் உடையில் இருக்கும் புகைப்படம் லீக்காகி வைரலானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஹீரோவும் நானே வில்லனும் நானே; தலைவர் 167 அப்டேட்