சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு போட்டியாக டிவிட்டரில் டிரெண்டாகும் தல அஜித்: எப்படி தெரியுமா?

 

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு போட்டியாக டிவிட்டரில் டிரெண்டாகும் தல அஜித்: எப்படி தெரியுமா?

விஸ்வாசம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாக நிலையிலும் விஸ்வாசம் ஹேஸ்டேக் டிரெண்டிங்கில் உள்ளது.

சென்னை: விஸ்வாசம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாக நிலையிலும் விஸ்வாசம் ஹேஸ்டேக் டிரெண்டிங்கில் உள்ளது.

நடிகர் அஜித் நடிப்பில் இயக்குநர் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விஸ்வாசம். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்நிலையில் விஸ்வாசம் படத்தின் அனைத்து அப்டேட்டுகளும்   அஜித் ரசிகர்களால் தினமும் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. இதன் படப்பிடிப்பு தொடங்கியது முதல் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் ரசிகர்கள் கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள். 

இந்தப் படம் பொங்கல் அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட படமும் பொங்கல் அன்று வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதனால் வரும் பொங்கல் அஜித்-ரஜினி மோதும் பொங்கலாக பார்க்கப்படுகிறது. 

viswasam

இந்த நிலையில் பேட்ட படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று  சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வருகின்றது. இதனையடுத்து #PettaAudioLaunch என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் டிவிட்டரில் டிரெண்டிங்கில் உள்ளது. ஆனால் எந்த அப்டேட்டும் வராத நிலையிலும் விஸ்வாசம் ஹேஸ்டேக்கும் இந்திய அளவில் டிவிட்டர் டிரெண்டிங்கில் உள்ளது. விஸ்வாசம் திரைப்படத்தின் முதல் பாடல் இன்று  வெளியாகலாம் என தகவல் வெளியானதை அடுத்து #Viswasam1stSingle என்ற ஹேஸ்டேக் டிரெண்டிங்கில் வந்துள்ளது.