சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திடீர் அமெரிக்கா பயணம்!

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திடீர் அமெரிக்கா பயணம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திடீரென தனது குடும்பத்துடன் அமெரிக்கா செல்லவுள்ளார்.

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திடீரென தனது குடும்பத்துடன் அமெரிக்கா செல்லவுள்ளார்.

ஷங்கரின் ‘2.0’ படத்தை தொடர்ந்து, கார்த்திக் சுப்புராஜின் ‘பேட்ட’ பட பணிகளை முடித்த ரஜினிகாந்த், ஓய்வெடுக்க தனது குடும்பத்துடன் அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தை தனது குடும்பத்துடன் சூப்பர் ஸ்டார் அமெரிக்காவில் கொண்டாடவுள்ளார்.

rajinikanth

புத்தாண்டு கொண்டாட்டங்களை முடித்துக் கொண்டு சென்னை திரும்பும் ரஜினி, பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாகவுள்ள ‘பேட்ட’ திரைப்படத்தின் புரொமோஷனில் பங்கேற்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருப்பதாக கூறப்படும் தகவல் குறித்த அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில் அப்படத்தின் பணிகளை ஜனவரி மாத இறுதியில் ரஜினிகாந்த் தொடங்குவார் என கூறப்படுகிறது.