சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று  தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடினார். அரசியலுக்கு வருவது உறுதி என ரஜினி அறிவித்த பின்னர், அவர் கொண்டாடும் முதல் பிறந்தநாள் என்பதால், அவரது ரசிகர்கள் கூடுதல் உற்சாகத்துடன் காணப்பட்டனர்.

திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், அவரின் ரசிகர்கள் என சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் ட்விட்டரில் களைக்கட்டியது. 

வியாபார ரீதியாகவும், சமீபத்தில் வெளியான 2.O திரைப்படம் ரஜினியின் இமேஜ்ஜை உலக தரத்திற்கு உயர்த்தி இருப்பதாக சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இதுமட்டுமின்றி, தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் ரஜினி திகழ்கிறார்.

இந்நிலையில், ரஜினியின் மொத்த சொத்து மதிப்பு 360 கோடிகள் என ஃபின்ஆப் தகவல் வெளியிட்டுள்ளது. நடிப்பிற்காக இவர் வாங்கும் சம்பளம் மற்றும் இவரது வீடு கார்கள் ஆகியவற்றை வைத்து இந்த சொத்து மதிப்பு  கணக்கிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் போயஸ் கார்டனில் வாங்கிய வீட்டின் தற்போதைய மதிப்பு ரூ.35 கோடி என்றும் ரஜினிகாந்திடம் ரேஞ்ச் ரோவர், பென்ட்லி  மற்றும் டொயோட்டா இன்னோவா ஆகிய 3 சொகுசு கார்கள் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி, ரூ.110 கோடிக்கு தனிப்பட்ட முதலீடுகளை ரஜினி செய்து வைத்திருப்பதும் தெரிய வந்துள்ளது. 

2012 முதல் 2016 வரை ரஜினியின் ஆண்டு வருமானங்களும் அந்த அறிக்கையில் வெளியாகியுள்ளது. அதன்படி, 2012 – ரூ . 49 கோடி, 2013 – ரூ. 60 கோடி, 2014 – ரூ. 35 கோடி, 2015 – ரூ . 58 கோடி, 2016 – ரூ .65 கோடி ஆகும்.