சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 2.0 படத்தின் அப்டேட் : ரசிகர்கள் உற்சாகம்!

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 2.0 படத்தின் அப்டேட் : ரசிகர்கள் உற்சாகம்!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் திரைக்கு வர இருக்கும் 2.0 படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் திரைக்கு வர இருக்கும் 2.0 படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார், எமி ஜாக்‌ஷன் உள்ளிடோர் நடித்திருக்கும் படம் ‘2.0’. இந்தப் படம் சுமார் ரூ.600 கோடி பொருட்செலவில் முழுக்க 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ளது. சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டிரைலர் மற்றும் மேக்கிங் வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்தப் படம் நவம்பர் 29-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. 

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தின் ரன்னிங் டைம்  148 நிமிடங்கள் ஆகும். அதாவது 2 மணி நேரம் 28 நிமிடங்கள் ரன்னிங் டைம் கொண்டதாக அமைந்துள்ளது. முன்னதாக இந்தப் படத்துக்கு தணிக்கைக்குழு யு/ஏ சான்றிதழ் அளித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.