சூப்பர் ஸ்டார், தல திரைப்படம் வெளியான தியேட்டருக்கு சீல்: காரணம் என்ன தெரியுமா?

 

சூப்பர் ஸ்டார், தல திரைப்படம் வெளியான தியேட்டருக்கு சீல்: காரணம் என்ன தெரியுமா?

சூப்பர் ஸ்டார் மற்றும் தல அஜித் திரைப்படம் வெளியான பிரபல தியேட்டருக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்

சென்னை: சூப்பர் ஸ்டார் மற்றும் தல அஜித் திரைப்படம் வெளியான பிரபல தியேட்டருக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

இயக்குநர் சிவா -அஜித் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் விஸ்வாசம். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். அதே போல் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் – ரஜினி கூட்டணியில் உருவாகியுள்ள படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, சசிகுமார், த்ரிஷா, சிம்ரன், நவாசுதீன் சித்தக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இந்த இரண்டு படங்களுமே வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.

இந்நிலையில்,சேலம் டவுனில் உள்ள ஆஸ்கார் திரையரங்கில் பேட்ட, விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்களுமே வெளியாகி இருந்தன. ஆனால் அந்த திரையங்கிற்கான உரிமத்தை புதுப்பிக்காததால், தாசில்தார் மாதேஸ்வரன் தலைமையிலான அதிகாரிகள் திரையரங்குக்கு சீல் வைத்தனர். இதனால் திரையரங்கிற்கு ஆர்வமாக படம் பார்க்க வந்த அஜித், ரஜினி ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.