சூப்பர் ஸ்டார் இளமையாக சிவகார்த்திகேயன் மாதிரி இருக்கிறார்: பிரபல நடிகை ட்வீட்!

 

சூப்பர் ஸ்டார் இளமையாக சிவகார்த்திகேயன் மாதிரி இருக்கிறார்: பிரபல நடிகை ட்வீட்!

‘பேட்ட’ டிரைலரில் ரஜினியை பார்க்கும் போது சிவகார்த்திகேயன் போல இருக்கிறார் என்று நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சென்னை: ‘பேட்ட’ டிரைலரில் ரஜினியை பார்க்கும் போது சிவகார்த்திகேயன் போல இருக்கிறார் என்று நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ‘பேட்ட’ படம் பொங்கல் விருந்தாக அடுத்த மாதம் 10ம் தேதி வெளியாகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. முழுக்க முழுக்க ரஜினிஸம் பேசும் இப்படத்தின் டிரைலரில் இடம்பெற்றுள்ள பஞ்ச் வசனங்கள் சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது.

 

‘பேட்ட ‘படத்தின் டிரைலர் வெளியானசில மணி நேரங்களிலேயே வைரலானது. இந்நிலையில் பேட்ட டிரைலர் குறித்து ட்வீட் செய்துள்ள  நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், ‘பேட்ட’ டிரைலர் மரண மாசாக இருக்கிறது. ரஜினி மிகவும் அழகாக இருக்கிறார்.சில காட்சிகளில் சிவகார்த்திகேயன் என்று நினைத்தேன். சூப்பர் ஸ்டார் இளமையாக இருக்கிறார். கார்த்திக் சுப்பராஜ் மேஜிக் செய்திருக்கிறார்’ என்று பதிவிட்டுள்ளார்.