சூப்பர் ஸ்டாரின் தர்பார் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

 

சூப்பர் ஸ்டாரின் தர்பார் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார் படம் பொங்கல் அன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படக்குழுவினர் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளனர். 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார் படம் பொங்கல் அன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படக்குழுவினர் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளனர். 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து 2020 பொங்கலுக்காக வெளியாக உள்ள திரைப்படம் ‘தர்பார்’. முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அனிருத் இசையமைத்த பாடல்கள், ட்ரெய்லர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அண்மையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவும் நடைபெற்றது.

DARBAR

இந்நிலையில் தர்பார் படம் ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.