சூப்பர் மார்க்கெட் வைத்திருக்கும் நபரின் குடும்பதில் 4 பேருக்கு கொரோனா.. அதிர்ச்சியில் சென்னைவாசிகள்!

 

சூப்பர் மார்க்கெட் வைத்திருக்கும் நபரின் குடும்பதில் 4 பேருக்கு கொரோனா.. அதிர்ச்சியில் சென்னைவாசிகள்!

அந்த குறிப்பிட்ட நாட்களில் சந்தைக்கு வந்து சென்றவர்கள் என அனைவரும் தனிமை படுத்தப்பட்டு வருகின்றனர். 

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2000ஐ கடந்துள்ள நிலையில், 1000க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியான சென்னையில், 600க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரவியுள்ளது. சென்னையில் அதிகமாக மக்கள் சென்று வரும் பகுதியான கோயம்பேடு காய்கறி சந்தையில் 7 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனையடுத்து, அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் அந்த குறிப்பிட்ட நாட்களில் சந்தைக்கு வந்து சென்றவர்கள் என அனைவரும் தனிமை படுத்தப்பட்டு வருகின்றனர். 

ttn

இந்நிலையில் சென்னை மந்தைவெளியில் சூப்பர் மார்க்கெட் வைத்திருக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கடையின் உரிமையாளர் அவரது மனைவி, மகள் மற்றும் மகனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் சூப்பர் மார்க்கெட் மூடப்பட்டுள்ளது. இதனையடுத்து, கடைக்கு சென்று வந்தவர்களை கண்டறிந்து தனிமை படுத்தப்படும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.