சூப்பர் டூப்பர் பாலிவுட் படத்தை ரீமேக் செய்யும் தனுஷ்!

 

சூப்பர் டூப்பர் பாலிவுட் படத்தை ரீமேக் செய்யும் தனுஷ்!

பாலிவுட்டில் சூப்பர் டூப்பர் ஹிட்டான த்ரில்லர் திரைப்படத்தைத் தமிழில் ரீமேக் செய்ய நடிகர் தனுஷ் முடிவு செய்துள்ளார். 

சென்னை: பாலிவுட்டில் சூப்பர் டூப்பர் ஹிட்டான த்ரில்லர் திரைப்படத்தைத் தமிழில் ரீமேக் செய்ய நடிகர் தனுஷ் முடிவு செய்துள்ளார். 

நடிகர் தனுஷ் நடித்த சர்வதேச திரைப்படமான ‘தி எக்ஸ்ட்ரானரி ஜெர்னி ஆஃப் தி ஃபகிர்’ திரைப்படம் தமிழில் ‘பக்கிரி’ என்ற தலைப்பில் வெளியாகவுள்ளது. கென் ஸ்காட் இயக்கத்தில் உருவான இப்படம் வரும் ஜூன் 21ம் தேதி இந்தியாவில் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் மும்பையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நடிகர் தனுஷ் தனது அடுத்த பாலிவுட் திரைப்படம் குறித்த அறிவிப்பினை வெளியிட்டார். அதன்படி பாலிவுட்டில் நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர்  ஹிட்டான ‘அந்தாதுன்’ படத்தினை தமிழில் ரீமேக் செய்ய விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

அந்தாதுன்

மேலும் 2009ஆம் ஆண்டிலிருந்து தனுஷ் ரீமேக் படங்களில் இனி நடிப்பதில்லை என முடிவு எடுத்திருந்தார்.   இந்தப் படத்தின் மேஜிக்கால் தன் முடிவை மாற்றியுள்ளார். மேலும், இதன் ரீமேக் உரிமங்களைப் பெற தீவிரமாக முயற்சி செய்து வருவதாக கூறப்பட்டுள்ளது.