சூப்பர் சிங்கர் 7 : இறுதி போட்டியில் செம்ம டுவிஸ்ட் செய்த அனிருத்

 

சூப்பர் சிங்கர் 7 : இறுதி போட்டியில் செம்ம  டுவிஸ்ட் செய்த அனிருத்

இப்போட்டியின் கிராண்ட் பினாலே கோவை கொடிசியா மைதானத்தில் நேற்று  நேரலை செய்யப்பட்டது.  

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கடந்த 6 சீசன்களை தாண்டி 7ஆவது சீசன் வெற்றிகரமாக நடந்து வந்தது.  இதன் இறுதி போட்டிக்கு புண்யா, விக்ரம், கௌதம், ஷாம் விஷால், முருகன் ஆகியோர் தேர்வாகி  இருந்தனர். இப்போட்டியின் கிராண்ட் பினாலே கோவை கொடிசியா மைதானத்தில் நேற்று  நேரலை செய்யப்பட்டது.  

mugen

இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெறுபவருக்கு  அனிருத்  இசையில் பாடும்  வாய்ப்பு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் யார் அந்த அதிர்ஷ்டசாலி என்று மக்கள் ஆர்வமாகக் காத்திருந்தனர்.  

aniruth

இந்நிலையில் ஒவ்வொரு கெட்டப்பில் வித்தியாசமாக வந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வந்த மூக்குத்தி முருகன் சூப்பர் சிங்கர் சீசன் 7 ன் பட்டத்தைத் தட்டி சென்றார்.  அவருக்கு 50 லட்ச ரூபாய் மதிப்பிலான வீடும் வழங்கப்பட்டது.

vikram

இரண்டாவது இடத்தை  விக்ரம்  வென்ற நிலையில் அவருக்கு 25 லட்ச ருபாய் மதிப்பிலான வைர நகைகள் கொடுக்கப்பட்டது.

punya

மூன்றாவது இடத்தை புண்யா மற்றும் ஷாம் விஷால் ஆகியோர் பகிர்ந்து கொண்டனர்.  இவர்களுக்கும் பாட வாய்ப்பு தருவதாகக் கூறி அனிருத் அங்கிருந்தவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.