‘சூப்பர் சிங்கர்’ பூவையாரா இது? வாயை பிளக்க வைக்கும் வைரல் போட்டோ!

 

‘சூப்பர் சிங்கர்’ பூவையாரா இது? வாயை பிளக்க வைக்கும் வைரல் போட்டோ!

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி  ‘சூப்பர் சிங்கர் ஜூனியர் 6’ தொடங்கியது.  

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில ஆண்டுகளாக சூப்பர் சிங்கர் என்ற  ரியாலிட்டி ஷோ ஒளிபரப்பாகி வருகிறது. பெரியவர்கள், சிறுவர்கள் என இரண்டு பிரிவாக இந்த நிகழ்ச்சி நடத்தப்படும். அதன்படி 2018 ஆம்  ஆண்டு அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி  ‘சூப்பர் சிங்கர் ஜூனியர் 6’ தொடங்கியது.  

ttn

இதில் கலந்து கொண்ட பூவையார் கானா பாடல்கள் மூலம் மக்கள் மனதை வென்றார். இந்த நிகழ்ச்சியில் பூவையார்  டைட்டில் வின்னராக தேர்வாகாத  நிலையிலும் அவருக்கு  திரைப்படங்களில்  பாடும்  வாய்ப்புகள் கிடைத்தன.  

ttn

அப்படி சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில்  படத்தில், வெறித்தனம் பாடலை விஜய்யுடன் சேர்ந்து பாடியும், ஆடியும் அசத்தி  இருந்தார். அதேபோல் ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையில் பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

இந்நிலையில் பூவையாரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் கோட்- சூட் போட்டுகொண்டு ஆளே அசத்தலாக மாறியிருக்கிறார். இதை கண்ட நெட்டிசன்கள், வெற்றி பயணம் தொடரட்டும் என்று வாழ்த்து கூறி வருகின்றனர்.