சூப்பர் ஓவர்…. டை… த்ரில் வெற்றி,,, இறுதியில் கோப்பையை தட்டிச்சென்ற இங்கிலாந்து!

 

சூப்பர் ஓவர்…. டை… த்ரில் வெற்றி,,,  இறுதியில் கோப்பையை தட்டிச்சென்ற இங்கிலாந்து!

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியான இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணியும், நியூசிலாந்து அணியும் மோதிகொண்டன. 

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியான இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணியும், நியூசிலாந்து அணியும் மோதிகொண்டன. 

புகழ்பெற்ற இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். 
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய மார்டின் கப்திலும், ஹென்ரி நிக்கோலஸும் துவக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் மார்டின் கப்தில் 19 ரன்களில் விக்கெட்டை இழந்தாலும், மற்றொரு துவக்க வீரரான நிக்கோலஸ் 55 ரன்கள் எடுத்து கைகொடுத்தார். 

அடுத்தடுத்து வந்த கேன் வில்லியம்சன் (30), டெய்லர் (15), ஜேம்ஸ் நீஷம் (19) என முன்னணி வீரர்கள் யாரும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடாமல் விக்கெட்டை இழந்தாலும் தனி ஒருவனாக போராடிய டாம் லாதம் 47 ரன்கள் எடுத்து கைகொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து அணி 241 ரன்கள் எடுத்து, இங்கிலாந்து அணிக்கு 242 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. 

நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக கிரிஸ் வோக்ஸ் மற்றும் ப்ளங்கட் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினர். இறுதியில் இங்கிலாந்து அணி யும் 241 ரன்கள் எடுத்து சூப்பர் ஓவரில் டையானது. 

இதையடுத்து இங்கிலாந்து அணி ஒரு ஓவரில் 15 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி, 15 ரன்கள் எடுத்தது. இதையடுத்து அதிக பவுண்டரிகளை எடுத்ததால் கனவு கோப்பையான உலகக் கோப்பையை  இங்கிலாந்து அணி தட்டிச்சென்றது.  அதன்படி 20 பவுண்டரிகளுக்கு மேல் அடித்த இங்கிலாந்து கோப்பையை வென்றது