சூப்பர் ஓவருக்கு ஷமியை விடுத்து ஏன் பும்ரா தேர்வு செய்யப்பட்டார்? – ரோகித் ஷர்மா விளக்கம்

 

சூப்பர் ஓவருக்கு ஷமியை விடுத்து ஏன் பும்ரா தேர்வு செய்யப்பட்டார்? – ரோகித் ஷர்மா விளக்கம்

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியின்போது சூப்பர் ஓவரை பந்துவீச பும்ரா தேர்வு செய்யப்பட்டதன் பின்னணி குறித்து ரோகித் ஷர்மா விளக்கம் அளித்துள்ளார்.

ஹாமில்டன்: நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியின்போது சூப்பர் ஓவரை பந்துவீச பும்ரா தேர்வு செய்யப்பட்டதன் பின்னணி குறித்து ரோகித் ஷர்மா விளக்கம் அளித்துள்ளார்.

நேற்று இந்தியாவுக்கு எதிராக நடந்த 3-வது டி20 போட்டியும் சமனில் முடிந்ததை தொடர்ந்து சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. ரோகித் ஷர்மாவின் கடைசி 2 அட்டகாச சிக்ஸர்களால் இந்திய அணி போட்டியை வென்றதோடு, டி20 தொடரையும் கைப்பற்றியது. உலகின் நம்பர் 1 ஒருநாள் போட்டி பந்துவீச்சாளரான ஜாஸ்பிரிட் பும்ரா இந்தப் போட்டியில் 45 ரன்களை வாரி வழங்கி விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை. டி20 கிரிக்கெட்டில் இது அவரது இரண்டாவது மோசமான பந்துவீச்சாக அமைந்தது.

ttn

அவ்வாறு இருக்கையில் சூப்பர் ஓவரில் பந்துவீச ஷமியை விடுத்து பும்ராவை கோலி அழைத்தார். சொல்லப் போனால் நேற்றைய போட்டியில் இந்திய அணியை தோல்வி நிலையில் இருந்து மீட்டு சூப்பர் ஓவர் வரை கொண்டு வந்தது ஷமி தான். அவர் 20-வது ஓவரை கட்டுக்கோப்பாக பந்துவீசி ராஸ் டெய்லரையும் போல்டாக்கினார்.

ttn

இந்த நிலையில், சூப்பர் ஓவரை பந்துவீச பும்ரா தேர்வு செய்யப்பட்டதன் பின்னணி குறித்து ரோகித் ஷர்மா விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “உண்மையில் சூப்பர் ஓவரின்போது திட்டம் எதுவும் வகுத்துக் கொண்டிருக்க முடியாது. அன்று என்ன நடந்தது என்பதை நீங்கள் மதிப்பீடு செய்ய வேண்டும். மேலும் நம்மிடம் உள்ள சிறந்த வீரரை அனுப்ப வேண்டும். அப்படி பார்க்கையில் நம்மிடம் உள்ள முக்கியமான பந்துவீச்சாளர் பும்ரா.

ttn

இதில் வேறு சாய்ஸ் இல்லை. இதுதவிர தொடர்ச்சியாக யார்க்கர் மற்றும் ஸ்லோ பந்துகளை வீசக் கூடியவரை பந்துவீச சொல்வதே சிறந்த முடிவாக இருக்கும். அன்றைய நாள் யாருக்கு சிறப்பாக இருக்கிறதோ அவருக்கே பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். நான் 60 ரன்கள் அடித்திருக்கா விட்டால், சூப்பர் ஓவரை விளையாட ஸ்ரேயாஸ் அல்லது வேறு பேட்ஸ்மேன் அனுப்பப்பட்டிருப்பார்” என்று கூறினார்.