சூடுபிடிக்கும் கோவிட்-19 விவகாரம்….. உலக சுகாதார அமைப்பின் நடவடிக்கைகள் குறித்து விசாரணை…. இந்திய உள்ளிட்ட 62 நாடுகள் கோரிக்கை…

 

சூடுபிடிக்கும் கோவிட்-19 விவகாரம்….. உலக சுகாதார அமைப்பின் நடவடிக்கைகள் குறித்து விசாரணை…. இந்திய உள்ளிட்ட 62 நாடுகள் கோரிக்கை…

இன்று தொடங்கும் உலக சுகாதார சபை கூட்டத்தில், இந்தியா உள்ளிட்ட 62 நாடுகளுடன் ஆதரவுடன் கோவிட்-19 தொடர்பான உலக சுகாதார அமைப்பின் நடவடிக்கைகள் குறித்து நடுநிலையான விசாரணை நடத்தக்கோரும் தீர்மானம் தாக்கல் செய்யப்பட உள்ளது.

சீனாவில் உருவாகி உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பின் நடவடிக்கைகள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச தொற்று நோயான கோவிட்-19 தொடர்பான நடவடிக்கைகளை உலக சுகாதார அமைப்பு தாமப்படுத்தியதாக முன்னணி நாடுகள் குற்றச்சாட்டின. கொரோனா வைரஸ் விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு முறையாக செயல்பட்டு இருந்தால் தற்போது உலக அளவில் ஏற்பட்டு இருக்கும் பாதிப்பை தடுத்திருக்க முடியும். சீனாவின் ஊதுகுழலாக அந்த அமைப்பு செயல்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றச்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ்

மேலும், கொரோன வைரஸ் உருவான வரலாறு மற்றும் கோவிட்-19 தொடர்பான உலக சுகாதார அமைப்பின் நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கடந்த மாதம் ஆஸ்திரேலியா கோரிக்கை விடுத்தது. இந்நிலையில் கோவிட்-19 குறித்து நடுநிலையான, சுயாதீனமான மற்றும் விரிவான விசாரணை மற்றும் உலக சுகாதார அமைப்பின் பங்களிப்பு தொடர்பான 7 பக்க வரைவு தீர்மானத்தை இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்கொரியா மற்றும் பல உறுப்பு நாடுகள் என மொத்தம் 62 நாடுகள் ஆதரித்துள்ளன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

உலக சுகாதார அமைப்பால் இன்று தொடங்கும் 74வது உலக சுகாதார சபை கூட்டத்தில் இந்த தீர்மானம் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதேசமயம் இந்த தீர்மானத்தில் கொரோனா வைரஸ் பிறப்பிடமாக கருதப்படும் சீனா அல்லது வுஹான் நகரம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை என தகவல். இருப்பினும் உலக நாடுகள் கொரோனா வைரஸ் விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பின் நடவடிக்கைகளின் மீது சந்தேகம் ஏற்பட்டு அதன் மீது விசாரணை கோரியிருப்பது சீனாவுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.