சூடா…சுவையா…ஒரு வாழைத்தண்டு சூப் செஞ்சு சாப்பிடலாமா!

 

சூடா…சுவையா…ஒரு வாழைத்தண்டு சூப் செஞ்சு சாப்பிடலாமா!

கோடை காலங்களில் பொதுவாகவே பால் டீ,காப்பி போன்றவற்றை குடிப்பதை முடிந்தவரை அவாய்ட் பண்ணுங்கள்.ரொம்ப அவசியம் என்றால்,பிளாக் டீ,க்ரீன் டீ குடிக்கலாம்.

கோடை காலங்களில் பொதுவாகவே பால் டீ,காப்பி போன்றவற்றை குடிப்பதை முடிந்தவரை அவாய்ட் பண்ணுங்கள்.ரொம்ப அவசியம் என்றால்,பிளாக் டீ,க்ரீன் டீ குடிக்கலாம்.இவை எல்லாத்தையும் விட,பழச்சாறு,மோர் குடிக்கலாம்.அதுவும் வேண்டாம்  என்று நினைத்தால் இருக்கவே இருக்கு வாழைத்தண்டு சூப்.அதை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாமா…

க்ரீன் டீ

தேவையான பொருட்கள்

துவரம் பருப்பு – 50 கிராம்

வாழைத்தண்டு – 100 கிராம்

பச்சை மிளகாய் – 2

பெரிய வெங்காயம் – 50 கிராம்

கொத்தமல்லி – சிறிது

நெய் – 2 tsp

பட்டை,மொட்டு,பூ –  தாளிக்க

உப்பு – தேவையான அளவு

எலுமிச்சை ஜூஸ் – 2 tsp

வாழைத்தண்டு

செய்முறை

துவரம் பருப்பு,வெங்காயம்,பச்சை மிளகாயை மூன்றையும்  எடுத்து ஒரு குக்கரில் நான்கு விசில் வரும்வரை விட்டு குழைவாக வேக வைக்கவும்.ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் நெய்யை ஊற்றி கொதிக்க விட்டு,அதில் நறுக்கி வைத்த வாழைத்தண்டைப்  போட்டு நன்கு வதக்கவும்.

அதன் பிறகு வேக வைத்த பருப்பை இத்துடன் சேர்த்து ஒரு கொதி வைத்து இறக்கவும்.மற்றொரு கடாயில் ஒரு டீஸ்பூன் நெய்யை ஊற்றி பட்டை மொட்டு பூ தாளித்து வாழைத்தண்டுடன் சேர்க்க வேண்டும்.அதோடு தேவையான அளவுக்கு உப்பு கொத்தமல்லி எலுமிச்சை ஜூஸை சேர்த்தால் சுவையான வாழைத்தண்டு சூப் ரெடி!