சுஷ்மா ஸ்வராஜ் கதாபாத்திரத்தில் நடிக்கப் போட்டிப்போடும் டாப்ஸி, வித்யா பாலன்!

 

சுஷ்மா ஸ்வராஜ் கதாபாத்திரத்தில் நடிக்கப் போட்டிப்போடும் டாப்ஸி, வித்யா பாலன்!

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நேற்று முன்தினம் மாரடைப்பால் காலமானார். அவரது திடீர் மறைவும் உலகத்தையும் பாலிவுட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நேற்று முன்தினம் மாரடைப்பால் காலமானார். அவரது திடீர் மறைவும் உலகத்தையும் பாலிவுட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அவரது கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறீர்களா என மிஷன் மங்கல் நாயகிகளிடம் கேட்டப்போது, சுப்மா ஸ்வராஜ் கதாபாத்திரத்தில் திரையில் நடிக்க விரும்புவதாக தெரிவித்தார்.

இதுகுறித்து வித்யா பாலன் கூறுகையில், சுஷ்மா ஸ்வராஜ் பல பாலிவுட் நடிகைகளால் போற்றப்பட்ட பிரபல அரசியல்வாதிகளில் ஒருவர். நான் பள்ளியில் படிக்கும்போது, ​​சுஷ்மா டிவியில் பேசுவதை எப்போது பார்ப்பேன். அவர் ஒரு சிறந்த தலைவர். நான் சுஷ்மாவின் தீவிர ரசிகை,  அவருடைய கதாபாத்திரத்தில் நடிக்க யார் தான் விரும்ப மாட்டார்கள், அவரை போன்று நடிக்க வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன். அவர் வலிமையானவர் மற்றும் சிறந்த பேச்சாளர். நான் சுஷ்மாவை ஒரு முறை விமான நிலையத்தில் சந்தித்தேன், அவருக்கு கொடுக்கப்படும் செல்வாக்கு ஆச்சரியமாக இருந்தது.  சுத்மாவின் இறப்பு நாட்டிற்கு பேரிழப்பு” என கூறினார்.

அக்ஷய் குமார், நித்யா மேனன், வித்யா பாலன், டாப்ஸீ பண்ணு, சோனாக்ஷி சின்ஹா , ஷர்மான் ஜோஷி மற்றும் பலர் நடித்து மிஷன் மங்கல் படம் வரும் ஆகஸ்ட் 15 ரிலீசாகிறது. இப்படத்தை ஜெகன் சக்தி  இயக்கியுள்ளார்.