சுஷ்மா ஸ்வராஜின் கடைசி நெகிழ்பதிவு!

 

சுஷ்மா ஸ்வராஜின் கடைசி நெகிழ்பதிவு!

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படும் அறிவிப்பு வெளியானதையொட்டி அவர் பதிவு செய்த ட்வீட்தான் சுஷ்மாவின் கடைசி ட்வீட். “இந்த நாளை பார்ப்பதற்காகத்தான், தான் வாழ்நாள் முழுவதும் காத்திருந்ததாக” நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் பணயகைதிகளாக சிக்கிய 46 செவிலியர்களை மீட்டது, வளைகுடா நாடுகளில் கொத்தடிமைகளாக இருந்தவர்களை திரும்ப அழைத்து வந்தது, நைஜீரியாவில் கடற்கொள்ளையர்களிடம் சிக்கிய இந்திய மாலுமிகளை மீட்டது என வெளியுறவுத்துறை அமைச்சராக சுஷ்மா ஸ்வராஜின் முக்கிய சாதனைகளாகச் சொல்லலாம். உடல்நலம் பாதிக்கப்பட்டதால் சுஷ்மா ஸ்வராஜ் அதிகம் வெளிநாடுகளில் பயணம் செய்யவில்லை. ஆனாலும், வெளிநாடுவாழ் இந்தியர்களின் பிரச்னைகள் அவர் கவனத்திற்கு வந்தபோது, உடனடியாக அந்த கோரிக்கைகள்மீது நடவடிக்கை எடுத்தார். ஒரே ஒரு ட்வீட் அனுப்பினால்கூட அதற்கும் உரிய பலன்கிடைக்கும்வகையில் செயல்பட்டதால், அவரின் இழப்பு அவரின் குடும்பத்தாருக்கு மட்டுமன்றி, அவரின் ட்விட்டர் ஃபாலோயர்களுக்கும் வருத்தமான செய்திதான்.

Sushma as Foreign affairs minister

கடைசிவரை தீவிர கட்சி பற்றுதலுடனும் விசுவாசத்துடனும் இருந்த சுஷ்மாவின் கடைசி ட்வீட்கூட கட்சி சார்ந்துதான் இருந்தது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படும் அறிவிப்பு வெளியானதையொட்டி அவர் பதிவு செய்த ட்வீட்தான் சுஷ்மாவின் கடைசி ட்வீட். “இந்த நாளை பார்ப்பதற்காகத்தான், தான் வாழ்நாள் முழுவதும் காத்திருந்ததாக” நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். தேர்தலில் போட்டியிடவில்லை, ஆட்சியில் இல்லை, கட்சியிலும் ஆக்டிவாக இல்லை என்றாலும்கூட, கடைசிவரை கட்சி நினைப்பாகவே இருந்து சென்றிருக்கிறார் சுஷ்மாஜி!