சுவையான மொறு மொறு கேழ்வரகு ரொட்டி செய்வது ரொம்ப ஈஸி..பேச்சிலர் சமையல்-3

 

சுவையான மொறு மொறு கேழ்வரகு  ரொட்டி செய்வது  ரொம்ப ஈஸி..பேச்சிலர் சமையல்-3

வெய்யில் காலங்களில் தெருவுக்கு தெரு விதவிதமான கூழ் வியபாரம் கொடிகட்டிப் பறக்கிறது.

வெய்யில் காலங்களில் தெருவுக்கு தெரு விதவிதமான கூழ் வியபாரம் கொடிகட்டிப் பறக்கிறது.எல்லா இடங்களிலும் சுத்தமான தண்ணீரில் சுகாதாரணமான முறையில்தான் செய்யப்பட்டிருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. எல்லாமே அப்படிதான் என்றும் சொல்வதற்கில்லை.அறிமுகமான இடத்தில் யோசிக்காமல் குடியுங்கள்.உடலுக்கு நல்லது.

ragi

சிலருக்கு  கேழ்வரகு கூழ் சாப்பிடுவது பிடிக்காது.அப்படிப்பட்டவர்கள்,வீட்டிலேயே எளிமையான முறையில் மொறுமொறுன்னு இருக்கிறமாதிரி கேழ்வரகு ரொட்டி செய்து சாப்பிடலாம்.ரொம்ப சிம்பிளான முறை என்பதால் பேச்சிலராக இருப்பவர்களுக்கு இது அட்டகாசமான ரெசிப்பி.

தேவையான பொருட்கள்

ragi

  • கேழ்வரகு மாவு ஒரு கப்
  • பெரிய வெங்காயம் – 1
  • பச்சை மிளகாய் – 2
  • முட்டை – 1
  • உப்பு
  • எண்ணெய்  தேவைக்கேற்ப 
செய்முறை 

ragi

  • கேள்வரகு மாவில் முட்டையை உடைத்து ஊற்றுங்கள்.அத்துடன் நீர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக  தோசை மாவு பதத்துக்கு கரைத்து வையுங்கள்.பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் இரண்டையும் எவ்வளவு பொடியாக நறுக்க முடியுமோ அவ்வளவு நறுக்கிக்கொள்ளுங்கள்.
  • தோசைக்கல்லிலேயே சிறிது எண்ணை விட்டு,வெங்காயம் ,பச்சை மிளகாய் இரண்டையும் லேசாக உப்புச்சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள்.
  • அதன் பிறகு, வதக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய் துண்டுகளை கரைத்து வைத்திருக்கும் மாவில் கொட்டி கலந்து,கல்தோசை போல கொஞ்சம் திக்காக ஊற்றி,அதன் மேல் அரைஸ்பூன் எண்ணெய் பரவலாக தெளியுங்கள்.
  • நன்றாக வெந்ததும் திருப்பி போட்டு  எடுத்தால் சுவையான கேழ்வரகு ரொட்டி ரெடி.இதில் ஹைலைட்டே இதற்கு சட்னி தேவைப்படாது என்பதுதான்.

இதையும் வாசிக்க: உடலை ட்ரிம்மாகவும் ஆரோக்கியமாகவும் மாற்ற வேண்டுமா! இதை மட்டும் செய்யுங்க போதும்!