சுவையான மொறுமொறு வெண்டைக்காய் வத்தல்!

 

சுவையான மொறுமொறு வெண்டைக்காய் வத்தல்!

வெண்டைக்காய் வழவழப்புத்தன்மை கொண்டது என்பதால், அது பலருக்கும் பிடிக்காத ஒரு காயாக இருக்கிறது.

வெண்டைக்காய் வழவழப்புத்தன்மை கொண்டது என்பதால், அது பலருக்கும் பிடிக்காத ஒரு காயாக இருக்கிறது. வெண்டைக்காய் சாப்பிட்டால் கணக்கு நன்றாக வரும்’ என்பார்கள். கணக்கு வருகிறதோ இல்லையோ ஏராளமான சத்துகளை வாரி வழங்கும் இயற்கையின் கொடை அது. வெண்டைக்காய் குழம்பு, பொரியல் சாப்பிட்டு இருப்போம். தற்போது வெண்டைக்காய் வத்தல் செய்வது எப்படி என்பதை காணலாம்.

தேவையான பொருட்கள்

vendakka

வெண்டைக்காய் – ஒரு கிலோ

உப்பு – தேவையான அளவு

புளிப்புத்தயிர் – அரை கப்

எண்ணெய் – தேவைக்கேற்ப

செய்முறை

vendakka

வெண்டைக்காயைக் கழுவி, வடித்து துண்டுகளாக நறுக்கி ஒரு பெரிய தட்டில் எல்லா நீரும் ஆவியாகும் வரை வைக்கவும்.

பின்பு புளிப்புத்தயிரில் ஊறவைத்து உப்பு சேர்க்கவும். அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.

இரண்டு நாட்கள் வெயிலில் உலர வைக்கவும். பின்பு காற்றுப்புகாத பாத்திரத்தில் போட்டு மூடி வைக்கவும்.

பரிமாறும் போது சிறிதளவு எண்ணெய்யில் போட்டு வறுத்து எடுத்துப் பரிமாறலாம்.