சுவையான பிரட் பக்கோடா- பெர்ஃபெக்ட் ஈவினிங் ஸ்னாக்ஸ்!

சுவையான பிரட் பக்கோடா- பெர்ஃபெக்ட் ஈவினிங் ஸ்னாக்ஸ்!

எப்போவும் போண்டா, வடை,பஜ்ஜி என்று ஒரே மாதிரியான ஸ்னாக்ஸ்  வகைகளைச் சாப்பிட்டு போரடிக்குதா… கவலையே பட வேண்டாம். இந்த  பிரட்  பக்கோடாவை ட்ரை பண்ணிப் பாருங்க … உங்களோட  ஃபேவரைட்  டிஷ் லிஸ்டில்  இதுவும்  கண்டிப்பா சேர்ந்திடும்.இதற்கு பெருசா நிறைய பொருள் வேணும்னு அவசியம் இல்ல, வீட்டுல இருக்குற பொருள்களை வச்சே செஞ்சுடுலாம். அவ்ளோ சிம்பிள் ஸ்னாக்ஸ் தான் இந்த பிரட் பக்கோடா.

bread-pakora.-01 jpg

தேவையான பொருட்கள் 

பிரட் – 4 ஸ்லைஸ் 
அரிசி மாவு – 2 ஸ்பூன் 
கடலை மாவு – 1/2 கப் 
உருளைக்கிழங்கு – நறுக்கியது 3 ஸ்பூன் 
வெங்காயம் – நறுக்கியது 3 ஸ்பூன் 
தக்காளி – நறுக்கியது 3 ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 ஸ்பூன் 
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்  
பச்சை மிளகாய் – 2
தக்காளி சாஸ் – 2 ஸ்பூன் 
கொத்துமல்லி – நறுக்கியது 2 ஸ்பூன் 
லெமன் ஜூஸ் – 2 ஸ்பூன் 
உப்பு – தேவையான அளவு 

செய்முறை:

ஒரு அகன்ற பாத்திரத்தில் பிரட்டை சிறு சிறு துண்டுகளாக்கி அதில் அரிசி மாவு,கடலை மாவு,உருளைக்கிழங்கு,வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாய்,மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,தக்காளி சாஸ்,லெமன் ஜூஸ், உப்பு, கொத்துமல்லி இலை ஆகியவை சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு நன்கு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாய் எடுத்து வைத்துக்கொள்ளவும் பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாகியதும் அதில் இந்த உருண்டைகளை போட்டு பொன்னிறமானதும் வறுத்து எடுத்தால் சுவையான பிரட் பக்கோடா ரெடி.