சுவையான கார்லிக் பிரெட் – எளிதாக வீட்டில் செய்து சாப்பிடுங்கள்!

 

சுவையான கார்லிக் பிரெட் – எளிதாக வீட்டில் செய்து சாப்பிடுங்கள்!

சுவையான கார்லிக் பிரெட் எளிதாக வீட்டிலேயே தயாரித்து சாப்பிட்டால் எப்படி இருக்கும்…இதை செய்ய வெறும் 30 நிமிடங்கள் மட்டுமே இதற்கு நேரம் செலவாகும்.

எப்போதும்போல பிரெட்டில் வெண்ணெய் தடவி சாப்பிடுவது சலிப்பாக இருக்கிறதா? சுவையான கார்லிக் பிரெட் எளிதாக வீட்டிலேயே தயாரித்து சாப்பிட்டால் எப்படி இருக்கும்…இதை செய்ய வெறும் 30 நிமிடங்கள் மட்டுமே இதற்கு நேரம் செலவாகும்.

ttn

தேவையான பொருட்கள்:

பிரெட் துண்டுகள் (தேவைக்கேற்ப)

5-6 பூண்டு பற்கள்

3 டீஸ்பூன் – வெண்ணெய்

1 டீஸ்பூன் – மிளகாய் செதில்கள்

துண்டாக்கப்பட்ட சீஸ்

கொஞ்சம் கொத்துமல்லி (அழகுபடுத்த)

1 தேக்கரண்டி – கற்பூரவல்லி

@delhigrapher

Garlic Bread Recipe ##foodrecipe ##garlicbread ##gharbaithoindia ##tiktokchef ##stayathome ##cooking

♬ original sound – delhigrapher

செய்முறை:

பூண்டு பற்களை நறுக்கிக் கொள்ளுங்கள். சுவை அதிகமாக இருக்க வேண்டுமென்றால் நீங்கள் அதிகமாக பூண்டு எடுத்துக் கொள்ளலாம்.

ஒரு பாத்திரத்தில் மிளகாய் செதில்கள், கற்பூரவல்லி, துண்டாக்கப்பட்ட பூண்டுகள் மற்றும் வெண்ணெய் ஆகியவற்றை எடுத்து அவற்றை ஒன்றாக நன்கு கலக்கவும்.

இப்போது ஒரு பிரெட் துண்டை எடுத்து அதன் மீது துண்டாக்கப்பட்ட சீஸ் வைக்க வேண்டும். அடுத்து இன்னொரு பிரெட் துண்டை எடுத்து சாண்ட்விச் போல அதன் மீது வைக்கவும்.

பிரெட்டின் இருபுறமும் வெண்ணெய் மற்றும் ஏற்கனவே நாம் பாத்திரத்தில் கலந்து வைத்துள்ள பூண்டு பேஸ்டை தடவ வேண்டும்.

மிதமான சூடு கொண்ட ஒரு பேனில் இந்த சாண்ட்விச்சை வைத்து ஒரு பக்கம் பழுப்பு நிறமாக மாறும்வரை சூடானதும் மறுபுறம் புரட்டவும். பிரெட்டின் இரண்டு புறமும் பழுப்பு நிறத்தில் சூடாகி இருக்க வேண்டும்.

அவ்வளவு தான் அடுப்பை அணைத்து விடலாம். நாம் தயாரித்த இந்த கார்லிக் பிரெட்டை துண்டுகளாக வெட்டி, அதன் மீது கொஞ்சம் கொத்துமல்லி தூவி அலங்கரிக்கலாம். பின்னர் சுவையான கார்லிக் பிரெட்டை நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் சாப்பிட்டு மகிழுங்கள்!