சுவையான உப்புமா கொழுக்கட்டை எப்படி செய்வது?

சுவையான உப்புமா கொழுக்கட்டை எப்படி செய்வது?

திடீரெண்டு வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தாலோ அல்லது பள்ளி, கல்லூரி முடித்து சோர்வாக வரும் பிள்ளைகளுக்கு சுவையான மற்றும் சத்தான சிற்றுண்டி தர வேண்டும் என்று எண்ணம் உள்ளவர்கள் இந்த உப்புமா கொழுக்கட்டையை செய்து கொடுக்கலாம். அதை எப்படி செய்வதை என்பதை பார்க்கலாம் வாங்க. 

upma

தேவையான பொருட்கள்: 

இட்லி அரிசி- 200 கிராம் 
துவரம் பருப்பு- 2 ஸ்பூன் 
மிளகு -1 ஸ்பூன் 
சீரகம்- 1 ஸ்பூன் 
தேங்காய் பூ  – 100 கிராம் 
கடுகு – 1 ஸ்பூன்
கறிவேப்பிலை – 2 அரக்கு 
உளுந்தம் பருப்பு- 1 ஸ்பூன் 
பெருங்காயத் தூள்- 1/4 ஸ்பூன் 
எண்ணெய் – 1 கரண்டி 
கொதிக்கும் தண்ணீர் – 3 டம்பளர் 
உப்பு – தேவையான அளவு 

upma kozhukattai

செய்முறை:

அரிசி, பருப்பு, மிளகு, சீரகம் ஒன்றாகச் சேர்த்து ரவை போல திரிக்கவும். எண்ணெய் காயவைத்து கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயம் போட்டு தாளித்து, கருவேப்பில்லை, தேங்காய் பூ சேர்த்து நன்றாக வதக்கி, பிறகு அரைத்திருக்கும் ரவையை கொட்டவும்.

இதில் உப்பு, கொதித்த தண்ணீர் சேர்த்து குக்கரில் 3 விசில் வரும்வரை வேகா வைக்கவும், இறக்கி ஆறவைத்து கொழுக்கட்டையாக பிடிக்கவும். 

upma

அரிசி உப்புமா கொழுக்கட்டை ரெடி. அதை புதினா சட்னியுடன் சாப்பிட சூப்பராக இருக்கும். 

இதையும் படிங்க: முடி கொட்டுகிறது என்று கவலையா இனிமேல் அந்த கவலையே வேண்டாம்!