சுவிஸில் நடந்தது இதுதான்.. சின்மயியை அழைத்துச் சென்றவர் வெளியிட்ட தகவல்

 

சுவிஸில் நடந்தது இதுதான்.. சின்மயியை அழைத்துச் சென்றவர் வெளியிட்ட தகவல்

வைரமுத்து மீதான சின்மயியின் பாலியல் குற்றச்சாட்டில் உண்மை இருக்க வாய்ப்பில்லை என அவரை சுவிட்சர்லாந்து அழைத்துச் சென்ற இனியவன் தெரிவித்துள்ளார்.

சென்னை: வைரமுத்து மீதான சின்மயியின் பாலியல் குற்றச்சாட்டில் உண்மை இருக்க வாய்ப்பில்லை என அவரை சுவிட்சர்லாந்து அழைத்துச் சென்ற இனியவன் தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தில் கடந்த 2004-ஆம் ஆண்டு நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது வைரமுத்து தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பாடகி சின்மயி குற்றம்சாட்டியிருந்தார்.

மி டூ இயக்கம் மூலம் சின்மயி வெளியிட்ட இந்த குற்றச்சாட்டை வைரமுத்து முற்றிலுமாக மறுத்திருந்தார். அதுமட்டுமின்றி, தன் மீது வழக்கு தொடர்ந்தால் சந்திக்கத் தயார் என்றும் வைரமுத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சின்மயி உட்பட அனைவரையும் அழைத்து சென்ற இனியவன், சின்மயியின் குற்றச்சாட்டில் உண்மையில்லை என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேட்டியளித்த அவர், “சின்மயியும், வைரமுத்துவும் தனித் தனியாக தான் தங்கி இருந்தார்கள். நிகழ்ச்சி முடிந்ததும் அனைவரும் பிரிந்து சென்று விட்டோம். இப்படி இருக்கையில், சின்மயி ஏன் இப்படி பேசுகிறார் என தெரியவில்லை. 

சம்பவத்துக்கு பின்னர் வைரமுத்து வீட்டுற்கு சின்மயி சென்று திருமண அழைப்பிதழை வழங்கியுள்ளார். அதேபோல், அவரின் பிறந்தாளுக்கு சின்மயி தாயார் வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவன் நான் தான். ஆனால், சின்மயி தற்போது இப்படி பேசுவது அதிர்ச்சியாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.