சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்ட 108 – நடுரோட்டிலேயே குழந்தை பெற்ற பெண்… ஆம்புலன்சின் அவல நிலை.. 

 

சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்ட 108 – நடுரோட்டிலேயே குழந்தை பெற்ற பெண்… ஆம்புலன்சின் அவல நிலை.. 

ரேஷ்மா என்ற கர்ப்பிணிப் பெண்ணுக்கு புதன்கிழமை  இரவு 1 மணியளவில் பிரசவ வலி எடுத்தது , அதனால் அவரது கணவர் வெங்கண்ணா 108 க்கு டயல் செய்தார், ஆனால் அவர்களிடமிருந்து எந்த பதிலுமில்லை.

சூர்யாபேட்டையில் 108 ஆம்புலன்ஸ் வராததால், கர்ப்பிணிப் பெண் ஒருவர் சாலையில் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். இந்த சம்பவம் புதன்கிழமை இரவு நடந்தது.
ரேஷ்மா என்ற கர்ப்பிணிப் பெண்ணுக்கு புதன்கிழமை  இரவு 1 மணியளவில் பிரசவ வலி எடுத்தது , அதனால் அவரது கணவர் வெங்கண்ணா 108 க்கு டயல் செய்தார், ஆனால் அவர்களிடமிருந்து எந்த பதிலுமில்லை. பின்னர் அவர் தனது வீட்டிற்கு அருகில் அமைந்துள்ள போலீஸ்  நிலையத்தை அணுகியபோது, அங்கு வாகன ஓட்டுநர் கிடைக்காததால் போலீசாரால் உதவ முடியவில்லை. பின்னர் வெங்கண்ணா தனது மனைவியை தனது ஸ்கூட்டியில் கூட்டிப்போக முயற்சித்தார் , ஆனால் அப்போது வலி அதிகரித்ததால் அவர் சாலையிலேயே  குழந்தையை பிரசவித்தார்.

108-ambulance-56

பிரசவத்திற்குப் பிறகு தாய் மற்றும் குழந்தை இருவரும் பாதுகாப்பாக இருக்கின்றனர் , வழக்கம் போல் காவல்துறையினர் எல்லாம் முடிந்த பிறகு அந்த இடத்தை அடைந்து, பெண்ணையும் குழந்தையையும்  நகரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு மாற்ற உதவியது. தற்போதைய ஊரடங்கு  காலத்தில்,108 ன் சேவை குறித்தும் ,ஏழை மக்களின் நிலை குறித்தும்  பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பினர்.