சுவாரஸ்யமான நிலையில் பெர்த் டெஸ்ட் : சரிவிலிருந்து மீண்டு வந்த இந்திய ஆஸ்திரேலிய அணிகள்

 

சுவாரஸ்யமான நிலையில் பெர்த் டெஸ்ட் : சரிவிலிருந்து மீண்டு வந்த இந்திய ஆஸ்திரேலிய அணிகள்

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடைபெறும் ஆஸ்திரேலிய இந்திய அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் ஆட்ட நேர இறுதியில் ஆஸ்திரேலியா 90 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 277 ரண்கள் எடுத்துள்ளது.

– குமரன் குமணன்

ஆஸ்திரேலியா:

இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி பெர்த் நகரில் தொடங்கியது .

indvsaus

இந்திய அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் முதலில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது .அடுத்த தொடங்கிய டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா 31 ரண்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .

இன்றைய பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட் செய்ய தீர்மானித்தது 

ஆஸ்திரேலிய அணியில் கடந்த டெஸ்டில் விளையாடிய அதே 11 பேரும் இந்த போட்டியிலும் இடம் பெற்று இருந்தனர்.

indvsaus

 இந்திய அணியில் காயம் காரணமாக அஷ்வின் மற்றும் ரோகித் ஷர்மா இடம்பெறவில்லை. அவர்களுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் மற்றும் வலது கை பேட்ஸ்மேன் ஹனுமா விஹாரி சேர்க்கப்பட்டனர்

நிதானமாகவும் தெளிவாகவும் ஆட தொடங்கிய ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர்களை ,இந்திய பந்து வீச்சு எந்த வகையிலும் அச்சுறுத்தவில்லை.

முதல் விக்கெட்டுக்கு 112 ரன்கள் சேர்ந்த பின்னர் தான் சரியாக 50 ரன்கள் அடித்திருந்த ஃபிஞ்ச் விக்கெட்டை பும்ராவால் எடுக்க முடிந்தது .105 பந்துகளை சந்தித்த ஃபிஞ்ச் 9 பவுண்டரிகள் அடித்திருந்தார் .

 

indvsaus

இதன் பிறகு 3 விக்கெட்டுகள் வீழ்ந்தன .இந்த முறையும் தடுமாறிய க்வாஜா 5 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் உமேஷ் யாதவ் பந்து வீச்சில் வீழ்ந்தார் 

க்வாஜா  38 பந்துகளை சந்தித்தும் 5 ரன்களே எடுக்க முடிந்தது. மூன்றாவது விக்கெட்டாக மார்கஸ் ஹாரிஸ் 70(141) ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார் ஹனுமா விஹாரி வீசிய பந்தில் ரஹானேவிடம் கேட்ச் ஆனார் ஹாரிஸ் .

அவரது இன்னிங்ஸில் 10 பவுண்டரிகள் அடிக்கப்பட்டன . ஆஸ்திரேலியா 134-3 என்று எடுத்திருந்த நிலையில் அடுத்து வந்த பீட்டர் ஹான்ட்ஸ்கோம்ப் 7(16) ரன்களில் இஷாந்த் ஷர்மாவின் பவுன்ஸர் பந்தில் தடுமாறி கோலியின் அபாரமான ஸலிப் கேட்ச்சால் வெளியேறினார் .

indvsaus

ஆஸ்திரேலியா184-4 எடுத்திருந்த நிலையில் அடுத்ததாக வந்த டிராவிஸ் ஹெட் ,ஷான் மார்ஷுடன் ஜோடி சேர்ந்தார் .இவர்கள் இணைந்து 84 ரன்கள் சேர்த்தனர் .

இந்நிலையில் யாருமே எதிர்பாராத விதமாக ,விஹாரி வீசிய ஒரு பந்தை மார்ஷ் அடிக்க , அது ரிஷப் பண்ட் காலில் பட்டு ஸ்லிப்பில் நின்ற ரஹானேவிடம் சென்றது துரிதமாக செயலாற்றி அதை பிடித்தார் ரஹானே ஆஸ்திரேலியா 232/5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மார்ஷ் 45(98) ஆட்டம் இழந்தார் .

இதனை தொடர்ந்து விரைவிலேயே ஹெட் 58 ரன்களில் இஷாந்த் ஷர்மா பந்துவீச்சில் ஷமி கேட்ச் பிடிக்க வெளியேறினார் 80 பந்துகளில் ஆறு பவுண்டரிகளை அடித்திருந்தார் .

indvsaus

ஆட்ட நேர இறுதியில் ஆஸ்திரேலியா 90 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்திருந்தது ,பெயன் 16(34 ) ரன்களுடனும் கம்மின்ஸ் 11(29) ரண்களுடனும் களத்தில் உள்ளனர் .

 நாளை காலை 7.50 மணிக்கு தொடங்கும் இரண்டாம் நாள் ஆட்டத்தில் ,மீதமுள்ள விக்கெட்டுகள் விரைவில் வீழ்த்தப்பட்டால் இந்தியா பலமான நிலையை எட்டும் .இல்லையேல் வழக்கமாக எதிரணியின் கடைசி கட்ட வீரர்கள் ஏற்படுத்தும் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும்.